பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 ❖ லா. க. ராமாமிர்தம்

நல்ல மாதிரியிலேயே மாண்டுட்டா. உன் செய்கையினாலே
அவள் சாவுக்குச் சேரவேண்டிய துக்கமும் அழுகையும்
போய்ச் சேரல்லே. நாளாவட்டத்துல நீயா உன் தவறை
உணர்ற வேளைவருமே. இந்தக் காலத் தவணை எல்லாம்
சேர்த்து ஒரு வழியா உத்தேசமா தீருமே அதுவரைக்கும்
உனக்குத் தூக்கம் கிடையாது. கண்ணீர் கிடையாது. எல்லாம்
புதுசா ஊறணும்.”

“என்னய்யா உன்னைப் பரிகாரம் கேட்க வந்தால்
சாபம் உடறயே!” கிழவனுக்கு வயிற்றில் புளியைக்
கரைத்தது.

“பரிகாரமா? பரிகாரமே கிடையாது மகனே! அது
மாதிரி ஒண்ணு இந்த வாழ்க்கையிலே இல்லை. மக்கள்
தாங்களே தங்களை ஏமாத்திக்க கற்பிச்சுகிட்ட பொய். யாரும்
காரியத்தின் விளைவிலிருந்து தப்பவே முடியாது. கடவுளே
தப்பிக்க முடியாது. எல்லாக் காரியத்தோடயும் எல்லாரும்
சம்பந்தப்பட்டவங்கதான். அதனாலேயே காரியத்தின் விளை
விலிருந்து யாருமே தப்ப முடியாது. நானும் தப்ப முடியாது.
என்னைக் காரணம் காட்டித்தானே அவளைக் கொலை
வாங்கியிருக்குது. அதனாலேயே அந்தத் துக்கம் பாதிக்குது.
இது மாதிரி அறிஞ்சும் அறியாமயும் யார் யார் கஸ்டமோ
நாங்கள் படறோம். எங்கள் ஜாதி தனி ஜாதி. உங்களுக்குச்
சொன்னால் புரியாது. அதோ தெரியுதே அது என்ன
சிதையா?”

“ஆமா, அவளுடையதுதான். ஆனால் எரிஞ்சு போயிருக்
கும். தெரியுதே அதன் கணகணப்புத்தான். அதுகூட பாதிக்கு
மேல் சாம்பராயிருக்கும். மிச்சம் தணல். அதுவே அப்படி
ஜொலிக்குது.” அவன் குரலில் அவனுடைய வியப்பு
தெரிந்தது.

“மலைச்சரிவிலே ஊர் இருக்குதுன்னு பேரே தவிர