பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



மந்த்ரஸ்தாயி : 195

“நீங்கள் கவலைப்படாதேங்கோ அப்பா, தொணப்பா தேங்கோ. கொஞ்ச நாள் இருந்துவிட்டு, ஊருக்குப் போயிடப் போறேள். என் ரொட்டீன்-இப்படியே எனக்கு வருடக் கணக்கில் பழகிப் போச்சு. நீங்கள் தூங்குங்கோ நிம்மதியா” ரேடியோவின் சத்தத்தைக் குறைக்கிறான்.

பர்வீன் ஸுல்தானா மாறி இப்போ வயலின் இசை ஹிந்துஸ்தானிதான். எஃகுத் தந்தியில் ஏதேதோ ஜாலம் நடக்கிறது. உடல் நரம்புகளில் பாய்ந்து-மார்பில், தோள் களில், நெஞ்சுக் குழியில் எனப் படிப்படியாய் என்னை ஆட்கொள்கிறது. தடால் என்று ‘gui'க்கு விழுகிறது. அங்கே யானையின், சிங்கத்தின் கம்பீரநடை கேட்கிறது. இலைகளும் மட்டைகளும் சலசலக்கின்றன. வாசிப்பது யார்? கேட்கத் தோன்றவில்லை. கேட்டால் கண்ணனுக்கு என்ன தெரியும்? அறிய அவசியமுமில்லை. கார்வைகள் என் மேல் வேயும் போதையில் விழிகள் செருகுகின்றன. யதார்த்தமுமில்லை. கனவுமில்லை. இரண்டுக்கும் இடை விளிம்பு நிலை.

“மந்த்ரஸ்தாயி” தந்த இந்த மயக்கத்தில் என் உடம்பே ஒரு தந்தி வாத்யம். எங்கு தொட்டாலும் அங்கு ஒரு ஸ்வரம் தெறிக்கிறது. உதிர்கிறது. அர்ச்சனைப் பூவாய்க் காணிக்கை யில் சுழல்கிறது. அம்மா, அப்பா, எல்லாம் உனக்கே உனதே. என் இதயம் நாதத்தின் ஊற்றுப் பெருக்கு சிற்றலைகள் கசிந்து பேரலைகளாகி பெரும் அலைகள் ஒன்றிய வீழ்ச்சி யில் ஸ்நானம் செய்கிறேன். திளைக்கிறேன், துளைகிறேன், துல்லியமாகிறேன்.

பின்னாலிருந்து யாரோ தோளைத் தொட்ட மாதிரி. சிரிப்பு, திரும்புகிறேன். .

நீர் வீழ்ச்சியின் படுதாவைத் தள்ளிக் கொண்டு வெளிப் படுகிறாள். அந்த அசாத்யமான கூந்தல், ஸ்நானத்தில்