பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4

&

மந்த்ரஸ்தாயி & 199

ஒடுவேன். என்னை வலுச்சண்டைக்கிழுக்கத் துடிக்கிறாள். ஏதேனும் பழியை என் மேல் சுமத்தி வம்பில் மாட்டி விட்டால், என்ன செய்வேன்? அவளுக்குச் சரியாய்ப் பேச எனக்குத் தில் கிடையாது. அப்படி எதிர் வாதாடினாலும் எடுபடாது. இது போன்ற சமாச்சாரத்தில் அவள் கட்சி தூக்குமா? நானா?

அவளைக் குளத்தில் பார்த்ததிலிருந்து, பிறகும் காண நேர்ந்த சமயங்களிலிருந்து வடிகட்டின சத்தாய் அந்தச் சிரிப்புத்தான் நிற்கிறது. அதன் எதிரொலியினின்று நான் இன்னமும் மீண்ட பாடில்லை. இத்தனை நாள், தூரம் கடந்தும் இந்த வீச்சா? தான் தெரியாது. குரல் மட்டும் ஒலிக்கும் பறவை. ராட்சஸி.

வயதுக் கோளாறு இவள் மேல் காதலாகி விட்டேனா? Hate-Love உறவு? சிரிப்பால், சிரித்தவளுடன் ஒருவேளை காதல் நேரிடலாம். ஆனால் சிரிப்புடனேயே காதல்? அதுவும் இந்தச் சிரிப்புடன்?

இதில் ஒரு அகம்பாவம், அலட்சியம். கேலி, பயமுறுத்தல், எல்லாம் ஒருங்கே த்வனிக்கின்றன. கூடவே ஒரு வசியம், மர்ம தத்வம்? பையா, இந்தச் சிரிப்புள் மீறிப் Liqlpril. The romanticism in you!

ஒன்று அடித்துச் சொல்வேன். அவளை நிர்வாணமாய்ப் பார்த்ததனால் எனக்கு அவள் மேல் எந்த விகாரமும் ஏற்பட வில்லை. அந்தச் சமயத்துக்கு அவள் நிர்வாணம் இயல்பாய்த் தானிருந்தது. நிர்வாணி என்று பெயரிட்டே அழைக்கலாம்.

நான் பட்டணத்துக்குத் திரும்ப தயாரான முதனாள், பாட்டி திடீரென இறந்து போனாள் தாம்பூலம் மாரில் அடைத்து. இத்தனைக்கும் இடித்த தாம்பூலம்தான். ஆனால் அவளுக்கு வேளை வந்துவிட்டது. வாசலில் கூடிவிட்ட