பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராசாத்தி கிணறு ❖ 11

நான் பார்த்தவரை ஊரு சூடுதான்” என்றான் பரதேசி.
மழை பேஞ்சால் தண்ணி நிக்கற மாதிரியில்லை. சரிஞ்சு
ஒடிடுது. தேக்கம் ஒண்ணும் பெரிசாக் காணோம். ஆனால்
மக்கள் இங்கேயும் வாழத்தான் செய்யறாங்க. விவசாயம்
செய்யறாங்க. எங்கேயிருந்தாலும் வாழ்ந்துதானே ஆவணும்.
தலைமுறைங்க ஆரம்ப நாளில் கண்ட செளகரியத்துலே
இல்லாட்டி புதுமையில இங்கே தங்கிட்டா அப்புறம்
இங்கிருந்து தப்பிச்சுப் போவ அவர்களுக்குத் தோணாது.
கஸ்டமோ நிஸ்டூரமோ மக்கள் வாழாத இடம் இல்லை.”

“ஏன்? உங்கமாதிரி ஆளுங்க வாழறப்ப மத்தவங்க வாழ
மாட்டாங்களா?”

“எங்கள் வாழ்க்கை வாழ்க்கையா இது? ஒரு இடத்துலே
தங்க மாட்டோம். தங்கக்கூடாது. பசிக்குதுன்னு வாய் திறந்து
யாரையும் கேட்கக்கூடாது. கேட்கமாட்டோம். எங்களுக்குக்
கட்டுப்பாடு எத்தினியோ இருக்குது. எங்களுக்கும் குருநாத
ருங்க இருக்குறாங்க அவர்களுடைய பலத்துல நாங்க பசியை
துன்னுட்டோம். காத்துதான் எங்க உணவு.”

“அண்ணாத்தே நீ சொல்றது நம்பும்படியா இருக்குதா?”

“அதனாலதான் அதைப்பத்தி நான் உங்ககிட்டப் பேச
வும் கூடாது. அந்தக் காரணத்துனாலேயே உன் பெண்
சாதி கொடுத்த பொங்கலை வேணாமின்னு தள்ளவும்
முடியல்லே. ஏத்துக்கவும் முடியல்லே. அதுலே எல்லாம்
உண்மையில் எங்களுக்கு நாட்டமும் இல்லே!”

“ஆச்சரியமா இருக்குதே, எப்படி ஐயா?”

“இது ஓயாத கதை. நாளா வட்டத்துல, அவள் கொண்டு
வந்த படையல்லே கொஞ்சம் கொஞ்சமா காரணமில்லாத
சந்தேகம் நீ பட்டு, அந்த சந்தேகம் முத்திப் போய், அவள்
கொலையிலே முடிஞ்சுபோய், நான் காரணமேயில்லாமல்