பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 & லா. ச. ராமாமிர்தம்

கும்பலில் அவளும் இருந்தாள். முகத்தில் இரங்கல், அனு தாபம் மாதிரி தெரியவில்லை. லேசான முறுவலிப்போ: சே எனக்கு ஏன் இப்படி புத்தி கோஷிக்கிறது?

பின்னர் நான் கிராமத்துக்குப் போக நேரவில்லை. அவளுடைய முகமும் பயமும் நினைவில் எங்கோ புதை யுண்டு போயின.

காலகட்டம் வினோதமான சமாச்சாரம். அதன் பின்னோக்கின வீச்சில், விஷயங்களின் பரிணாமங்கள் எப்படி எப்படியோ மாறுகின்றன. சம்பவங்கள், மதிப்பீடுகள், எடைகள் அவையவைகளுக்குரிய குழிகளில் விழுந்து விடுகின்றன. சின்னதாயிருந்தது, பெரிதாகி, பெரிது அற்ப மாகி விடுகிறது. இத்துடன் மந்த்ரஸ்தாயியின் மாஜிக்கையும் சேர்த்துக் கொள். தம்பி, அது தனியல்ல; உன் ஸ்தாயி.

வயலின் இசை மாறி, இப்போ ஸோ ஜா ராஜகுமாரி”

லெய்கலின் குரலை golden voice என்கிறார்கள். அப்படி ஒன்றும் இனிமையில் அவனை நான் சேர்க்க மாட்டேன். எப்பவுமே அவன் மந்த்ரஸ்தாயிதான். ஆனால் அங்கு அவன் தொடும் ஆழங்கள், பாடகனே நினைக்காத ஆழங்கள்-நாதத்தின் படுகையிலேயே புரள்கிறான். மாந்தர் செவிபட மேலே வராது, அங்கேயே அவைகளின் தனிமை யில், கற்பில் நீந்தும் நாதபிந்துக்களுடன் அந்தக் குரலும் பிந்துக்களைச் சொரிகிறது. ஏதேதோ அனுமானங்கள். அந்த ஆழங்களிலிருந்து முகடுகள் காட்டுகின்றன. பிடி எட்டாமல் வழுக்குகிறது. ப்ரக்ஞை ப்ரதrணம் வருகிறது. நேர்ந்த சம்பவங்கள், இழைத்த காரியங்கள், தம் தம் மணிகளை இழந்த பதர்களாய் வெற்றியில் அலைகின்றன.

கல்யாணம் செய்து கொள்கிறோம். வாழ்க்கை பூரா முதலிரவாகுமா? முதலிரவே நீ ஆயுசாய் எதிர்பார்த்து,