பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்த்ரஸ்தாயி : 201

பூஜை செய்தபடி இருக்கிறதோ? அன்றே எத்தனைக் கண்ணுரிப்பு, கலக்கங்கள்.கலக்கங்கள் மாறின அளவுகள், அளவு கோல்கள்; உன் வாழ்வுக்கும் நீ சமாதானமாக வேண்டிய வேறுபாடுகள்? அன்று தலைகாட்டினவை, அவைகளின் வேளை வந்ததும் முழு சொரூபத்தில் தலை விரித்தாடுகின்றன.

குழந்தைகள் பிறக்கின்றன. பிறந்தவை பெரிசாகின்றன. ஆக ஆக அவைகளுக்குப் பெற்றோர் மேல் சகப்பு பெற்றவர் களுக்குக் குழந்தைகள் மீது ஏமாற்றம். “நம் உடம்பையே பார்த்துக் கொள்ளுங்கள், அஞ்சு விரலும் ஒண்ணா யிருக்கோ?” என்று சமாதானம் வேறே. புளித்துப் போன பழமொழி (ஆனால் வாழ்க்கையில் பழமொழிகள் இல்லா விட்டால் தொலைந்தோம்!)

முதுகில் குத்து விழுந்த பின்தான், பிறவியுடன் கொண்டு வந்திருந்த கத்தியை, கையுள் இத்தனை நாள் எவ்வாறு ஒளித்து வைத்திருந்தான் என்கிற கேள்வியின் கொக்கி, மரணத்தில் மங்கிக் கொண்டிருக்கும் பார்வையை அடைக்கிறது.

ராமா! ராமா!!

அவனை ஏன் அழைக்கிறாய்? நீ ஏமாந்த நேரத்தை நொந்து கொள். உண்மையை முகத்துடன் முகம், விழியோடு விழி நோக்கத் தைரியமின்றி, வியாக்யானங்களுள் ஒளிந்து கொள்வதே வாழ்க்கை முறையாகிவிட்டது.

இரவு சுமார் எட்டுக்குக் கிட்ட

அன்றை எப்போது நினைத்தாலும் இப்பத்தான் நேர்வது போல, உள்ளமும் உடலும் வெலவெலத்துச் செயலிழந்து விடுகின்றன. அன்று மிச்ச நாள் பாழ்.

வீட்டை நோக்கி, கிருஷ்ணகிரி ரோட்டில் விரைந்து