பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்த்ரஸ்தாயி & 203

ஜாக்கிரதையாக ஒட்டினான். குட்டையான மெலிந்த உருவம். முன் மண்டையில் லேசாகிக் கொண்டிருந்த தலை மயிரை ஜாக்கிரதையாக ஒட்டி வாரியும், பிரிகள் காற்றில் அலைந்தன.

ஒருமுறை முகம் என் பக்கம் திரும்பியபோது அதில் புத்திசாலித்தனம் குறுகுறுப்பது கண்டேன்.

“ஆபீஸில் இன்னிக்கு லேட் ஆயிடுச்சி. ஒரு ஃபைலை முடிக்க வேண்டிய அவசரம். அதனால்தான் இன்னிக்கு உங்களைச் சந்திக்க முடிஞ்சது” வாய்விட்டுச் சிரிப்பு. “நானே மிஸஸ்ஸை அளைச்சுக்கிட்டு வீட்டுக்கு வரத்தா னிருந்தேன். அடுத்த வாரம் பிறந்த வீட்டுக்குப் பிரசவத் துக்குப் போவுது. கண்ணன் நிறைய உங்களைப் பத்திச் சொல்லியிருக்கான். நாங்கள் நிறையப் பேசுவோம். ஸார், நான்கூட எழுதறேன்” மறுபடி சிரிப்பு. அதில் இப்போது லஜ்ஜை, “ரெண்டு தடவை ஸ்ெக்கண்டு ப்ரைஸ் கிடைச் சிருக்கு. இதை உங்க கிட்டே சொல்றதுக்கே என்னவோ மாதிரியிருக்கு-ஸார், உங்களுக்குப் போட்டியான்னு சிரிச்சுக் கறீங்களோ என்னவோ? ஸார், இப்பவே சொல்லிடறேன். என் மிச்ச ஆயுசு பூரா எழுதினாலும் நான் உங்கள் எழுத்தின் ஒரம் கூட எட்ட முடியாது. எனக்கு நல்லாத் தெரியும். அதுக்கெல்லாம் ஆசைப்படறதே தப்பு:”

வண்டி வழுக்கிக் கொண்டு போயிற்று. நல்லா ஒட்டத் தெரிஞ்சவன். வேக வெறியில்லை. பொறுப்பும் எச்சரிக்கை யும் தெரிகின்றன.

கண்ணனுக்கும் இவனுக்கும் சில விஷயங்களில் சாயை ஒன்றாயிருக்குமோ? பேச்சில் வசீகரம். இவனிடம் சாயைகள் கூட கண்ணன் சொல்லியிருக்கிறான். குறுக்குப் பரீட்சைகள் ஏதேதோ தேறியிருக்கிறானாம். முன்னேற்றமே முனைப் பாய்த் திட்டமிட்ட பரீட்சைகள், தொடர்புகள், ஆடம்பரங்கள்