பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 : லா. ச. ராமாமிர்தம்

அனாவசியச் செலவுகள் தவிர்த்த வாழ்க்கை, சிக்கனம் ஆனால் கஞ்சத்தனம் கிடையாது.

“ஆனால் உங்கள் எளுத்தை எல்லாமே புரிஞ்சுக் கிட்டேன்னு சொல்ல முடியாது. சிலது எங்களுக்கு இப்போதைக்கு இல்லேன்னே தோணுது நாளாக ஆக ஒருவேளை புரியுமோ என்னவோ?-சிரிப்பு. “படிச்சவுடனே கிடைக்காத எளுத்தை எளுதணுமா? என்கிற கட்சியைச் சேர்ந்தவன் நான். தப்பா நெனைக்காதீங்க நினைச்சுக்க மாட்டீங்க. உங்களோடு என்ன வேணுமானாலும் பேச லாம்னு கண்ணன் சொல்லியிருக்கான்.”

வாழைப்பழத்தில் ஊசியேற்றுகிறான். “ஆனால் அதையும் நீங்களே சொல்லிட்டீங்க: அவரவர் பூத்ததுக்குத் தக்கப்படி பக்கா defence ஸார் அது! ஏன், ஒரு பேட்டியிலோ, முகவுரையிலோ, இன்னும் வெளிச்சமாவே எளுதினதெல்லாம் புரிஞ்சேதான் ஆவணு மான்னு கேக்கறீங்க நல்ல dating ஸார் உங்களுக்கு. எங்கள் கேள்வியையே பதிலாய் எங்கள் மேலேயே தூக்கிப் போட lங்களே!” மறுபடியும் சிரிப்பு. நானும் சிரிக்கிறேன்.

“ஆனால் ஒண்ணு ஸார். எங்களுக்கு இதுதான் ஆச்சரியம். இந்த வயசுலேயும் எளுதிட்டிருக்கிறது. ஒண்ணு இதிலிருந்து புரியுது. எளுத்துக்கு வயசு கிடையாது. ரிடையர் மென்ட் கிடையாது. அப்படி நினைக்கிறதுலே எங்களைப் போலவங்களுக்கு ஏதோ தெம்பாயிருக்கு. எங்களுக்குப் பேர் பண்ண இன்னும் சான்ஸ் இருக்கு இல்லையா?”

அவன் திடீரென ‘பைக்கை முறுக்கின வேகத்தில் டயர்கள் க்றீஈச். நான் அவன் மேல் சாய்ந்தேன்.

எங்கள் எதிரே ஒரு கார் எங்களைக் கடந்து பறந்தது. அதனின்று ஒரு சிரிப்பு எங்கள் மேல் மோதிற்று.