பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 & லா. ச. ராமாமிர்தம்

விதிமுறைப்படி நடக்க வேண்டியவையெல்லாம் நடந்தேறிய பின் இருப்பதை வைத்துக் கொண்டு உருக்கூட்டி, சாமர்த்தியமாய், இரக்கத்துடன் மனிதாபிமானத்துடன், சிரத்தையுடன் தைத்திருந்தார்கள் என்றே சொல்ல வேண்டும். வெள்ளைத் துணியில் இறுகச் சுற்றி விட்டார்கள். உடலுடன் வண்டியில் நான், கண்ணன், இன்னும் நெருங்கிய நண்பர்கள் இருவர் போனோம். முன்கூட்டியே விட்டில் இருந்தவர்களுக்குச் சேதி போய், தயாராக்கியிருந்தது. காத்திருந்தார்கள்.

அவன் மனைவி மாடியிலிருந்து இறங்கி வந்தாள். அழுது, முகம் வீங்கி அப்படியெல்லாமில்லை. துயரத்தை அதற்குரிய கெளரவத்துடன் தாங்கிக் கொண்டிருந்தாள். அவளே குழந்தை முகமாய்த்தானிருந்தாள். குழந்தை வயிற்றில் குழந்தை! ஆண்டவனே. இப்படியெல்லாம் ஒரு விளையாட்டா?

முகத்தை மூடியிருந்த துணியைத் தள்ளிக் காண்பித்த தும், அவள் பார்த்துவிட்டு,

“இது பாவாயில்லே. பாவா முகம் சிரிச்ச முகம்.” அவ்வளவுதான். சொல்லிவிட்டு மேலே ஏறிப் போய் விட்டாள்.

கணவன் மரணத்தை ஏற்க மறுக்கிறாள். ஆனால் கணவனுடைய நினைவு முகத்தை ஸ்தாபிக்க முயல்கிறாள்.

நினைவு முகம் நித்திய முகம்.

குற்ற உணர்வு சில இரவுகளில் எழுப்பி விடுகிறது. நாங்கள் சந்திக்காமலே இருந்திருந்தால் இந்த விபத்து நேர்ந்திருக்காதோ? அவர் பாட்டுக்கு நேரத்துக்குப் பத்திரமாய் வீடு போய்ச் சேர்ந்திருப்பாரோ? நான் குதித்து