பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*>

மந்த்ரஸ்தாயி & 207

விட்டேன். அவரால் முடியாதா? எனக்காகத் தயங்கினாரா? அந்தப் பொடி நேரத் தயக்கம். அவர் விதியை முடிக்கப் போய் விட்டதே? அப்போ நான் காரணமா?

என் அந்திமக் காலத்தில் நினைவையே மாறாத புண்ணில் தீய்த்து விட்டதொரு சம்பவத்தை என் கடைசி வேளையுடன் சுமந்து செல்வது என் சிலுவையா? நல்ல ஜன்மமா, சின்ன உயிர், அதன் முழு வாழ்வு இருந்திருந்தால், எத்தனையோ பேருக்குப் பயன்பட்டிருக்கும் பிறவி. இதெல் லாம் உனக்குக் கிடையாதா? இல்லையேல் ஏன் பிறப்பித் தாய்? சுற்றியிருப்பவருக்கு ஆசை காட்டி ஏமாற்றவா? சாவே இதனால்தான் உன்னோடு எப்பவுமே சமாதானம் ஆக முடியாது.

மண்டை கொதிக்கிறது.

காருள் இருந்தது யார் என்று பார்க்க முடியா விட்டாலும் அந்தச் சிரிப்பை வைத்துச் சொல்கிறேன், அதற்குரியவளைச் சந்தித்திருக்கிறேன். முப்பது, முப்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன் நான் என் உத்தியோகம், வயது, உடல் செழிப்பில் இருந்தபோது

-எங்கோ காம்ப்"பிலிருந்து ரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறேன். விடிந்தால் சென்ட்ரல்’.

ஒரு ஸ்டேஷனில் வண்டி நின்று புறப்பட்டு விட்ட பின், ஒரு ஜோடி அவசரமாய் மூட்டை முடிச்சுடன் முண்டி யடித்துக் கொண்டு ஏறிற்று. பின்னாலிருந்து போர்ட்டர் அவர்களை உள்ளே தள்ளித் திணித்தான்.

எனக்கு எரிச்சலாய் வந்தது. இரவெல்லாம் இடம் எனக்கு மட்டும் என்று நினைத்திருந்தேன்.

என்னைப் பார்த்து விட்டாள். அவள் கண்கள் விரிந்தன. “அட நீங்களா? அப்படியே மூட்டை முடிச்சு