பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 & லா. ச. ராமாமிர்தம்

களைப் போட்டபடி என்னை இடித்துக் கொண்டு அருகே உட்கார்ந்து விட்டாள். என் கூச்சம் அவளுக்கு அக்கறை யில்லை. ஆனால் எனக்கும் என் வெறுப்பினுடேயே ஒரு அல்ப சந்தோஷம்-ஸ்பரிச சபலம்தான்-அடித்துக் கொண்டதை மறுப்பதற்கில்லை.

அட, இடைச்சிக்கு முதல் வகுப்பு ஏறும்படி வாழ்வா? ஆனால் கேட்க நான் யார்? கொண்டவன் பாக்கியம். அவன் எதிர்சீட்டில் சரிந்து கிடந்தான். காங்கையடிக்கும் கண்கள் என் மேல் ஊன்ற முயன்றன.

“அவரைக் கண்டுக்காதீங்க.” “ஏன் ஜூரமா, தண்ணியா?”

“ஐயோ அப்படியிருந்தால்தான் தேவலையே! அதை ஏன் கேக்கறீங்க? போதை மருந்து. ஊசிலே ஏத்திக்கிறது. எவ்வளவோ சொல்லியும், தடுத்தும் பார்த்தாச்சு. அது அவ்வளவுதான். இனிமே பூட்ட கேஸ்!”

எனக்கு மார்பு சில்லிட்டது.ஒடுக்கிக் கொண்டேன். இத்தனை குரூரமா? தனக்கு இன்னும் செளகரியமாய் என்னை நெருக்கினாள்.

“ஆமா, அன்னிக்குக் குளத்தில் என்னைப் பார்த்து அப்பிடி மிரண்டுட்டே? உன் மூஞ்சியை நெனச்சு நெனச்சுப் பார்த்து, சிரிச்சுச் சிரிச்சு எனக்கு இன்னமும் மாளல்லே. அதுவே ஒரு வியாதியா ஆயிடுச்சு. ஓ, இவர் கிட்டேயும் சொன்னேன். இவரும் சிரிக்கிறார். ஆனா இவரு உன் பக்கம் தான். பாவம் விவரம் தெரியாத வயசு, ரொம்ப மிரண்டிருப் பான் என்கிறாரு ஆனால் இன்னும் நீ அப்படியே சொல்லிக் கிட்டிருக்க முடியுமா? கல்யாணம் கட்டி, கொளந்தே குட்டி பெத்து, இப்ப எல்லா விவரமும் தெரிஞ்சிருக்குமே!’ முழங் கையால் விலாவில் இடித்தாள். வலித்தது.