பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்த்ரஸ்தாயி & 209

“உன் புருஷனைக் கவனி. மூஞ்சி வெளிருதே. வாந்தி வருதோ என்னவோ?”

“ஆமா- சூள் கொட்டினாள். “அதுக்கு வேறென்ன வேலை? இதோ பாரு வாழறதுக்கு உடம்பு, வழிகாட்ட புத்தின்னு ஆண்டவன் கொடுத்தனுப்பிச்சிருக்கான். அதன் படி நடக்காட்டி தன் வாந்தியிலே தானே முளுவிச் சாவ வேண்டியதுதான்!”

என்ன பேசுகிறாள்? தத்துவமா, விரக்தியா, கஷ்டத்தில் அலுத்துப் போன ஜீவன்.இடைச்சி பேச்சா இது?

ரயில் மெதுவாக நகர ஆரம்பித்தது. ஸ்டேஷன் வருகிறதா? இல்லை, சிக்னல் தகராறா? அவள் பேராசை என்னைப் பூரா வருடியது. முகம் மிக்க அருகாமையில் வந்து விட்டது. அனல் மூச்சு என் முகத்தை எரித்தது. விழிகள் பச்சையாக மாறி விட்டனவா? அவைகளின் தனி ஒளி என்னை உறிஞ்சுவது போல எனக்கு உடல் ஜிவ்'விட்டது. வெலவெலத்துப் போனேன். அவைகள் ரயில் ஜன்னலின் இரு பக்கங்களில் ஊன்றிக் கொள்ள நடுவே மாட்டிக் கொண்டேன். பயத்தில் திணறினேன். மூச்சுப் பிடித்து, என்னைத் தடுத்துக் கொண்டிருந்த கையை உதறி ஓடிப் போய் கதவைத் திறந்து, ரயில் இன்னும் நகர்ச்சியிலிருக்கை யிலேயே குதித்து விட்டேன். கைப்பெட்டியை nட்டில் விட்டு விட்டது கூட ஞாபகமில்லை. உடல் ரத்தத்தைச் சுண்டி, குடலைக் குழப்பும் அந்தச் சிரிப்பின் துரத்தலினின்று ஒடினேன்.

ஒடி ஒடி சட்டைப் பையில் இருந்த சில்லறையில்ஏதோ பஸ், நடை, பிச்சை சவாரி, என்று ஒட்டமாய், வெற்று வயிறுடன், பிற்பகலோ, மாலையோ, விளக்கு வைத்தோ எதுவுமே நினைவில்லை. எப்படியோ வீடு போய்ச் சேர்ந்து