பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 ❖ லா. ச. ராமாமிர்தம்

காரணமாயிட்டேன். அந்த வினையும் என்னை விடாது.
உன் கேள்விக்கு பதிலோ சமாதானமோ, சொல்றதுக்கு நான்
இங்கே இல்லை. நான் சொல்றதைக் கேட்கறதுக்குத்தான்
இந்த நடுராத்திரியிலே வந்திருக்கே. ஆமா, நீ ஏன் இங்கு
ஒரு கிணறு தோண்டக்கூடாது?”

“கிணறா? நடக்கிற காரியமா?”

“நடக்கிற காரியமா இல்லாட்டி இந்த வாயிலே வராது.
ஆ எனக்குப் புரிஞ்சுப் போச்சு. உன்னிடத்தில் இந்த சேதி
தெரிவிக்கத்தான் இந்தக் குகையிலே மாட்டிட்டிருக்கேன்.
இந்த காரியம் முடிஞ்சவொடனே எனக்கு இங்கிருந்து
விடுதலை கிடைச்சுடும் மகனே. பரம்பொருளின் சேதி
எப்படி இருந்தாலும் சரி. அதை வெளியிடுவதற்கு நம்
அங்கங்களை------அது எப்படியேனும் பயன்படுத்தும்.
அதில் யார், எது? எப்போன்னு ஆளும் சமயமும் ஏன்னு
தேர்ந்தெடுக்கறதெல்லாம் நமக்குத் தெரியாது. அதுக்குத்தான்
தெரியும். இந்தக் கிணறு தோண்டற விஷயத்துல மூணுபேர்
சம்பந்தப்பட்டிருக்கோம். நீ, உன் பெண்சாதி, தபால்காரன்
மாதிரி தான்.”

கிழவன் வசியம் கண்டவனாய் கேட்டுக் கொண்டிருந்
தான்.

“உன் பெண்சாதியை மசானம் வெச்சிருக்கே அந்த
இடத்துலே தோண்டறே. ஒண்ணு உனக்கு முக்கியமா
சொல்லணும். மறக்காம எப்பவும் நினைப்பிலேயே
வெச்சுக்க. ஆமா, கிணறைத் தோண்டிட்டதனாலேயே உன்
பெண்சாதியைக் கொன்ன பாவத்தைக் கழுவிட்டதாக் கனவு
காணாதே. அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் காணாதே.
கிணத்தைக் கிணத்துக்காகவே தோண்டறதா நினைச்சுக்க.
தண்ணியில்லாம கஸ்டப்படறாங்களே மக்கள். அவங்களுக்
காகத் தோண்டறதா நெனைச்சுக்க இல்லே அவள் பேரை