பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்த்ரஸ்தாயி & 211

தூரத்து உறவு கூட வேலை காத்திருந்தது. ஆனால் உடம்பில் பழைய தென்பு, பலம் வரவில்லை. வரவேயில்லை.

‘வெடுக்கென்று விழிப்பு வந்ததே என்னைத் திடீரென்று சூழ்ந்து கொண்ட நிசப்தம்தான். காரணம்? சுற்றும் முற்றும் பார்க்கிறேன். கண்ணன் மேஜை மேல் கைகளினிடையே கவிழ்ந்த தலையுடன் துங்குகிறான். ரேடியோவில் வைத்திருந்த அலை ஒய்ந்து விட்டது போலும். லேசாய் கர்ர்புர்’

திடீரென்று பயமாயிருக்கிறது. வெளியிலிருந்து யாரேனும்?-இல்லையே, உள்ளே கதவு தாழிட்டுத்தானே யிருக்கிறது. ஆனால் நான் தனியாயில்லை. யாரும் தென்படவுமில்லை. பயமாயிருக்கிறது. என்னைச் சூழ்ந்த நிசப்தம் உண்மையில் அது இல்லை. தன்னுள்ளிருந்து எனக்கு ஏதோ தெரிவிக்கத் தவிக்கிறது. நரம்புக்கு நரம்பு ஏதோ தந்தி பறக்கிறது. பயமாயிருக்கு.

“கண்ணா!” உரக்கவே கூப்பிடுகிறேன். பதில் இல்லை. அப்படி இருக்க மாட்டானே! எழுந்து போய் அவன் காதண்டை கத்துகிறேன். “கண்ணா! கண்ணா! புரண்டு கூடக் கொடுக்கவில்லை. லேசாய்க் குறட்டை பாவம், அசதி, எனக்குப் பயம் அதிகரிக்கிறது. அவன் தோளைப் பிடித்து உலுக்குகிறேன். ஊஹூம் என் தொடல் அவன்மேல் பதிய வில்லை.

தற்செயலாய் என் பார்வை என் படுக்கை மேல் செல்கிறது. அங்கு ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறேன். இதென்ன அதிசயம்? கனா இன்னும் ஓயவில்லையா? கனாக்குள் கனவா? இப்படியும் ஒரு நிலையா?

இப்போது அவளைப் பார்க்கிறேன். கட்டிலண்டை நின்று கொண்டிருக்கிறாள். பிறந்த மேனியில் வரை