பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 ஆத்மன்

மனிதன்தான் தெய்வமாகிறான். தெய்வம் என்பது ஒரு சித்தி நிலை. தான் இல்லாத முடியாத தன்னிடம் இலக்கணங் களை, சிறப்புகளைத் தான் விருப்பப்பட்ட ஒரு உருவத்தில், இடத்தில் ஆவாஹனம் செய்து, அதைத் தரிசனமாக்கப் பாடுபடுவது மனித இயல்பு.

கூடவே தெய்வத்திடம் தான் விரும்பிய பலன்களை எதிர்பார்ப்பதும் மனித இயல்பு.

ஆனால் தெய்வீகம் தெய்வத்தைக் காட்டிலும் பெரிது. தெய்வீகம் தெய்வத்தின் அம்சங்களைக் குறிப்பிடுகிறது. தெய்வத்தின் உருவை, உருவின் எல்லைகளைக் கடந்தது. மானுடம் தெய்வீகத்தைக் காட்டிலும் உயர்ந்தது. தெய்வத்திடம் காணாத ஒரு சிறப்பு மானுடத்துக்கு உண்டு. அதுதான் ப்ரயத்னம்.

தடுக்கியோ விழுந்தோ விடாது எழுந்து ஜாண் ஏறினால் முழம் சறுக்கினாலும் சறுக்கட்டும் நான் விட மாட்டேன். நினைத்ததை சாதித்தே தீருவேன் என்னும் தீவிரம்.

இது அரக்கர்களிடமும் உண்டு. இருக்கட்டும். இந்த