பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 & லா. ச. ராமாமிர்தம்

ராமாயண ஹாரத்தின் ரத்னகண்டி என்று காவியகர்த்தா ஹனுமானைக் குறிப்பிடுகிறார். தன்னைப் பற்றியே நினைப் பில்லாமல் தன் பராக்ரமத்தையே மறந்துபோய் ராமனுடைய நினைப்பு ஒன்றே மூச்சாய் இப்படி ஒரு ஆள் இருக்க முடியுமா? தன்னில் அத்தனையுமே ராமஸ்மரணைக்கு மாற்றிவிட முடியுமா? ரொம்பவும் இந்த யோசனையில் ஆழ்ந்தால் அப்படி இருக்க முடியும் என்று என்னில் சந்தேகம் தோன்றுகிறது. இன்றைய சந்தேகம் நாளை நிச்சயம் தெளிவு ஆகிவிடும். சந்தேகமே அதனால்தானே! சந்தேகத் திற்குள்ளேயே தெளிவு ஒளிந்து கொண்டிருக்கிறது.

ஆகவே அனுமனுக்கு ராமநாமம் மூச்சானால் ராம கிருஷ்ணருக்கு மாதா! மாதா!!

பைத்தியம் பிடித்து அலைகிறார். Romain Ronald S/616OT Mad man of God GTGTlpTff.

ராமகிருஷ்ணருடைய அரற்றல் எனக்கு ஒரளவு புரிகிறது. ஏனெனில் என்னைப் பெற்ற பெற்றோரில் நான் பாக்கியம் செய்தவன். என் சின்ன வயதிலிருந்தே பெற் றோர்கள்தான் நடமாடும் தெய்வங்கள் என்று கண்டு கொண்டு விட்டேன். கண்ணெதிரில் இவர்கள் இருக்கையில் நாம் தெய்வம் என்ற ஒன்று தனியாய்த் தேடுவானேன்? என்று இப்பவும் தோன்றுகிறது. எனக்கு 84 வயதிலும் தம் தாயார் உயிருடன் இருக்கும் முதியவர்களைக் கண்டால் எனக்குப் பொறாமை ஏற்படுகிறது. தாயார் இருப்பவர்கள் மஹாபாக்யவான்கள். உடனே என்னை அறியாமலே கைகள் அவர்களுக்குக் கூம்புகின்றன. என் வயதில் நான் தாயாருக்கு ஏங்குவது துராசைதான். எனக்குத் தெரிகிறது. ஆனால் தாயாருடைய தன்மை எங்கே போகும், அதை இட்டு நிரப்ப யாரால் முடியும்?

லலிதா சஹஸ்ரநாமத்தில் முதல் நாமமே ஸ்ரீமாத்ருவே