பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 : லா. ச. ராமாமிர்தம்

விமோசனத்தைத் தேடி எந்த தெய்வத்தையோ (தெய்வ மாய்த்தானிருக்க வேண்டுமென்பதில்லை). அது ஒரு பொருளாயிருக்கலாம். ஸ்தலமாயிருக்கலாம். மனதுக்குப் பிடித்துப் போன ரூபமாகவோ, அரூபமாகவோ ஆவாஹன மாயிருக்கலாம். அதன்மேல் அளவற்ற ஆர்வம். புரிந்தாலும் புரியப் புரிய ஆசை காட்டி இன்னும் எட்டி எட்டிப் போகும் புரியாத்தன்மை, ஒரு லேசான பயம், கூடவே கொள்ளை அன்பு, சிரத்தை இவையெல்லாம் சேர்ந்து, புத்தியும் உணர்ச்சியும் கலவை. அந்தக் கலவையில் ஒரு அமைதி யும், நம்பிக்கையின் விளிம்பும் தெரியும். நீ எனக்கு கிடைப்பாயோ இல்லையோ, உன்னைவிட்டால் எனக்கு கதியில்லை என்கிற திண்ணமான Statement. இதுவே இந்த சமயத்தின் திருப்தி.

சத்சகவாசம், பக்தி, பஜனை, கூத்தாட்டம் இவை மூலம் வரவழைத்துக் கொள்ளும் உணர்ச்சிப் பெருக்கு நிஜ வெள்ளி மலையே மாறலாம். மனதின் உண்மையைப் பொறுத்தது.

ஞானம் தாண்டி தியானம் நாம் வரித்த லட்சியத்தின் உருவை மனதில் நிலைநிறுத்தி அதையே எண்ணிக் கொண் டிருப்பது. தியான சமயத்தில் வேறு சலனங்களுக்கு இடம் கிடையாது, இடம் கூடாது. தியானம் பழகப் பழக வசத்துக்கு வரக்கூடிய மனப்பழக்கம். தவம் தீவிரமான தன் நினைவே அற்ற தியானம் ஒரு எண்ணம். ஒரே எண்ணத்தை உருவாக்கு வதிலேயே கருத்தும் ஸ்வயார்ப்பணம். தவத்தின் விளைவு தரிசனம். சுலபமாக சொல்லிவிட்டேன். இது நேர்வதற்கில்லை. ஆயுசுகள் கடக்க வேண்டி வரலாம். ஒரே திருப்பத்தில் நேரலாம். ஜன்மேதி ஜன்மமாய் நான் உழன்று அடைந்திருக் கும் பக்குவம் புஷ்ப்பிக்கலாம். நான் திடீர் எதிர்பாராமல்