பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 & லா. ச. ராமாமிர்தம்

பையே துடைத்துவிட்டுத் தலை தூக்கி நிற்கும் ஸர்வ ப்ரக்ஞையின் வெறும் விளிம்புதான்-தலை தூக்கிக் காண்பிக்கையில் அதன் அழுத்தத்தைத் தாங்க உடம்பு சக்தியற்றுப் போய் விடுகிறது. நானே எனக்கு இல்லாவிட்டா லென்ன? பயமாயிருக்கிறது. கூடவே ஒரு மட்டற்ற மகிழ்ச்சி. இந்த “த்ரில் மறுபடியும் கிடைக்காதா?

உன்னை உனக்கு லேசாக அடையாளம் காண்பிக் கிறேன். அவ்வளவுதான்.

யார் பேசுகிறது? அந்தப் புன்னகை? அம்மா! அம்மாடி! அனாஹதத்வனி தனக்குக் கேட்டதாக ராமகிருஷ்ணர் சொல்கிறார்.

ஒலி கேட்காத மந்திரம் என்று அனாஹதத்வனி லலிதா ஸஹஸ்ரநாமத்தில் விளக்கப்படுகிறது (ஸ்வாமி ஸத்யா னந்தா)

ராமகிருஷ்ணர் அம்மா! என்கிறார். நான் பொதுவாக அவள் என்று சொல்லிவிட்டுப் போகிறேன்.

இந்த சமயத்தில் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்பு கிறேன்.

ராமகிருஷ்ணருக்கு அவளின் மூக்குத்தி தெரிந்தது. ராமகிருஷ்ணருக்கு அனாஹதத்வனி கேட்டது. சந்திரா தேவிக்கு ராமகிருஷ்ணரின் தாயார்) சிவனின் கர்ப்பக்ரஹத்திலிருந்த ஒரு ஜோதி தன் வயிற்றுள் புகுவதை உணர்ந்தாள்.

அதேபோல கன்னிமேரியின் வயிற்றுள் ஒளிக்கரண மாகக் கடவுள் புகுந்து இயேசு அவதரித்துக் கன்னிமேரி கன்னி மாதாவானாள். --