பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 & லா. ச. ராமாமிர்தம்

மென்றோ பெருமான் விலங்கு ரூபத்தில் அவனை வேட்டை காட்டி, நடுவழியில் ஆற்றில் தாகத்திற்கு தண்ணீர் குடிக்க குனிந்து, தலை நிமிர்ந்ததும் அதோ மலைமேல் காளத்தி அப்பர் கண்ணில் பட அவன் ஒடோடி வந்து அவரை அனைத்துக் கொண்டதும் என்னப்ப கண்ணப்ப நில் நில் என்று லிங்கத்தினின்று கரம் புறப்பட்டு மறு கண்ணை அம்பால் தோண்ட ஆரம்பித்துவிட்ட அவன் கரத்தைப் பிடித்துத் தடுத்ததும் எனக்கு இன்னும் புல்லரிக்கும் அழியாத் தருணங்கள். கண்ணப்பனுக்கு மூன்றே நாட்களில் முக்தி. மூன்று நாட்கள் நீ முழு ஆர்வத்துடன் கடவுளைத் தேடினால் உனக்குக் கிடைத்து விடுவார் என்று ராம கிருஷ்ணர் சொன்னது இங்கு குறிப்பிடத்தக்கது.

நித்யத்துவத்தைத் தொட்டபின் வேளை ஏது? காலம் ஏது? சரித்திரம் ஏது? வரலாறு ஏது? இங்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். “அப்போ நீ எண்ணுவதெல்லாம் உண்மை அல்லது உண்மையாக வேண்டுமென்று விரும்பு கிறாயா? அப்படி ஏதும் நான் எண்ணவுமில்லை. சொல்லவு மில்லை. ஆனால் எண்ணாமலிருக்கும் நிலையை நான் அடையவில்லை. வாழ்க்கையின் இகபரங்கள் இன்னும் இயங்கிக் கொண்டிருப்பதற்கு மூன்று காரணிகள் உண்டு என எனக்குப் படுகிறது 1.TRUTH-இது குன்றின் மேலிட்ட தீபமோ அல்லது குஹையில் ஒரு பிறையில் அகலும் திரியு மின்றி அழியாச் சுடராய் உலகைக் காலம் கடந்த சக்தியாக நடத்திக் கொண்டிருக்கிறது. இதைத் தவிர இதன் உண்மை யான தன்மை என்றுமே புரியப் போவதே இல்லை. இதில் தேவர்களிலிருந்து தாவரம், சலனம், அசலனம், தவம், தரிசனம் உண்டு, இல்லை என்னும் எதிர்மறைகள் யாவும் அடங்கிவிட்டன. அவ்வளவுதான் எனக்குத் தெரியும்.

2. லட்சியம் (ideal) இதில் மனிதனுடைய ஆசைகள்