பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ஆத்மன் & 229

(உயர்ந்தவை, எட்டக்கூடியவை, முடியாதவை, லோகாதய மானவை, ஆத்மீகமானவை இவைகளும் சேர்ந்துதான், மனிதன் TRUTHல் தன் சக்திக்கேற்றவாறு வகுத்துக் கொண்டு செயலில் சாதிக்க விரும்புகிறான். லட்சியம் சில சமயங்களில் முழுக்கவே கூடலாம் அல்லது ஒரு பகுதியே நிறைவேறலாம். அல்லது துருவ நட்கூடித்ரமாகவே நின்று விடலாம். இருந்தாலும் லட்சியத்திற்கு ஒரு வேகம் உண்டு. முயற்சியைத் தூண்டிவிடும் சக்தி.

3 யதார்த்தம் (REALITY) நடப்பதென்ன? இருப்ப தென்ன? முயற்சியின் விளைவு என்ன? செயல்பாடின் விளைவு என்ன? எண்ணியபடி செயல் விளைகிறதா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் கிடைக்கும் பதில், அதிலிருந்து கிடைக்கும் தெளிவு. இவை எல்லாம் reality யைச் சேர்ந்ததுதான். மூன்று வினைகளும் கரை காணாத சமுத்திரங்கள். .

ஆனால் இவைகள் சோதனைகள் மூலம் ராமகிருஷ்ணர் கரைகண்டு வந்திருக்கிறார் என்பதை மறுக்க முடியாது.

சரி. முக்தி என்பது என்ன? கேள்வி, பதில், உடைமை மூன்றிலிருந்தும் விடுதலை!

எல்லாம் நானே என்ற சர்வப்ரக்ஞை இது பரமானந்த நிலை என்கிறார்கள். யாரே அறிவர். கண்டவர் விண்டிலர்: விண்டவர் கண்டிலர். ஹம்ஸம் என்பது ஜீவாத்மனைக் குறிப்பது. வேதாந்த மரபு என சுவாமி சித்பவானந்தா குறிப்பிடுகிறார். அப்போது பரமஹம்ஸன் என்பது பெரிய ஜீவாத்மா. அப்பொழுது ராமகிருஷ்ண பரமஹம்ஸர் பரமாத்மாவுடன் கலக்கவில்லை என்ற அர்த்தமில்லை. கலந்த பின்னும் தன்னை அல்லது தான் என்ற மனநிலையை நிறுத்தி வைத்துக் கொண்டிருக்கிறார். ஏன்?