பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ❖ லா. ச. ராமாமிர்தம்

இந்தக் கோடாரியை எங்கேருந்து பிடிச்சாரு? இந்தப்
பக்கத்துலே நான் பார்த்ததில்லே. புது மோஸ்த்தரா ரெண்டு
பக்கமும் கூரிலே வளைஞ்சு. நம்பள்ளாம் மரம் வெட்டற
கோடரி ஒரு பக்கம் கூரோடு கனமாதான் பார்த்திருக்கோம்.
இது நமக்கேன் பாடு.

ஆயுதங்களைக் கீழே எறிந்துவிட்டு கிழவன் சிதை
எதிரே குந்திட்டு உட்கார்ந்து அதைச் சிந்தித்தபடி இருந்தான்.
<br.சற்று நேரம் பொறுத்து அவள் அவனருகே சென்று
சொம்பை நீட்டினாள். அவனும் சட்டென ஞாபகம
வந்தவனாய் பாலை சிதைமேல் ஊற்றினான். சாம்பர்
கொஞ்சம் பறந்தது. ஆனால் நெருப்பு பூரா அவிந்துவிட்டது.

“மாமா என்ன காரியமா ஆயுதங்களுடன் வந்திருக்
கீங்க? இனிமேல் செய்யறதுக்கு என்ன இருக்கு? என்ன
செய்ய முடியும்? போனவங்க போயிட்டாங்க. அத்தை
பூவாடையிலே பூந்துட்டாங்க. வீட்டு அரிசிச்சாலுல இருந்து
கிட்டு நம்மைக் காப்பாத்துவாங்க. நீங்க கவலைப்படாதீங்க.
உங்க புள்ளையும் மருமகப் பொண்ணும் நல்லா கவனிச்சுப்
போம். இந்த வூட்டுல என்ன குறைவாயிருக்குது. நீங்க
திண்ணையில குந்திகிட்டு நிம்மதியாயிருங்க.”

“இல்லை மவளே இனிமேல்தான் நான் செய்ய
வேண்டியதெல்லாம் இருக்குது. நான் இங்கே ஒரு கிணறு
தோண்டப் போறேன். உன் அத்தையை எரிச்ச இடத்துலே.”

“கிணறா? என்ன அவசியம்? நம் பங்குக்கு வர்ற
தண்ணி நமக்குத்தான் பத்துமே. அப்படியே குறைஞ்சாலும்
என் அப்பன் கொடுப்பாரே!”

“இது வயல்காட்டுக்கில்லே மவளே. ஊர்மக்களுக்கு.
அவங்க தாகம் தணியறதுக்கு.”

“ஓ அதுவும் நல்ல ரோசனைதான். அத்தை பேருல