பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 & லா. ச. ராமாமிர்தம்

வீற்றியபடி, பையன் மேல் தங்கிய அவர் பார்வையில் கருணை வழிந்தது.

அன்றைய ஹோமம் முடிந்து, குண்டத்தில் கங்குகள்

“குழந்தாய், இங்கு வா” பையன் அருகே வந்ததும், ஹோமகுண்டத்திலிருந்து அஸ்தியை எடுத்து அவன் நெற்றி நீட்டுக்கு இட்டார்.

சாந்தினி, பரிவின் பீறல் தாங்கமுடியாமல், அவனை வாரித் தன் மடியில் இருத்திக்கொண்டாள். பையனுக்கு அழுகை புதிதாகப் பீறிட்டது.

“இந்தத் தவப்பிஞ்சுக்குத் தாங்கள் என்னத்தைக் கற்றுத் தரமுடியும்? என்ன இவனுக்கு ஏறும்?”

“இவனுடைய பெற்றோர்கள் குருகுல வாஸ்த்துக்கு இவனை நம்மிடம் விட்டுச் சென்று விட்டார்கள். இவ னுடைய தந்தையும் நானும் பால்ய ஸ்னேகர்கள். எங்கள் விதி எங்களைத் தனித்தனி வழியில் பிரித்து விட்டாலும் எங்கள் நட்பின் கொழுந்து குனியாமல் அப்படியே வீசிக் கொண்டிருக்கிறது. தவிர, சாந்தினி, பையனுக்கு வித்தை ஏறுமா, ஏறாதா என்று கணிக்க நாம் யார்? வயதுடன் புத்தியை அளவுகட்டுவது அறியாமையாகும். அவனறியாமல் ஒரு அணுவும் அசையாது. அவளால் ஆகாதது ஏதுமில்லை. கர்ப்பவாஸ்த்துள் புகுமுன் இந்த உயிர்த்தாது ஞானப்பாலில் முட்ட முட்ட நீந்தியிருந்தால் யார் கண்டது?”

அவள் அவன் தலையைக் கோதிவிட்டாள். காலை சூர்யனில் அவன் தலைமயிர் தங்க மோதிரக் குவியலாய் மாறிவிட்டது. கண்ணிர் கன்னங்களில் காய ஆரம்பித்து விட்டது. முகத்தோடு முகம் புதைத்து,