பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 & லா. ச. ராமாமிர்தம்

“புரியவில்லையே! இறந்து விட்டனரா?”

“இல்லை இல்லை!!” அலறினான். “குருவிடம் பாடம் கற்றுக் கொள்ள விட்டுப் போய்விட்டனர்.”

“இவ்வளவுதானே! குருகுலவாஸம் முடிந்து அவர்களே வந்து உன்னை அழைத்துப் போகவோ, அல்லது அப்போது நீயே பெரியவனாகிவிடுவாய் அல்லவா!-நீயே அவர்களிடம் போகவோ வாய்ப்பு இருக்கிறதே! என்னைப் பார். எனக்குப் பெற்றோர்களேயில்லை. இறந்தா போய்விட்டேன்? மொழு மொழுவென்று இருக்கிறேனா யில்லையா?”

“உனக்குப் பெற்றோர்கள் ஏன் இல்லை? இறந்து விட்டனரா?”

“இறந்த மாதிரிதான். ஏதோ கண்முன் பூச்சி பறக்கிற மாதிரி ஒரு நினைப்பு இடறி அதுவும் மங்கிக் கொண்டு வருகிறது. எங்கோ குஹையிருள். நான் திடீரென ஒரு தனிமை உணருகிறேன். முக்கி இடறி எழுந்து தத்தித் தத்தி குஹை வாயிலுக்குப் போய்ப் பார்த்தால், அதோ து ஊஊரத்தில் என் தந்தையின் கொம்புக் கிளைகளின் நிழலாட்டம் காலை வெய்யிலில் கூடவே தாய். உடனே மலைச்சரிவில் மறைந்தும் விட்டனர். பிறகு இன்னமும் அவர்களைப் பார்க்கப் போகிறேன். பார்த்தாலும் அடையாளம் கண்டு கொள்வேனோ அறியேன்.” .

“இப்படியும் உண்டோ? அதிசயிப்பில் பையன் அழுகை மறந்தான்.

“ஏன் இருக்கக் கூடாது? ஆனால் நினைக்கிறேன். நான் பிறவி ஊனம் என் வலது பின் தொடை எலும்பு சரிந்திருக் கிறது. ஏனைய மான்களைப் போல் என்னால் ஒடமுடியாது. அதனால் என்னைக் கழித்து விட்டார்கள். என்னைப் போன்ற பிறவிகளை-தனக்கே பயனில்லாதவைகளைக்