பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



  • :

$

235


காப்பாற்றுவதை விடத் துறந்து விடுவதே மேல். ஆனால் நான் புல்லையும் செடியையும் மேய்ந்து இதுவரை பிழைத்துத்தானிருக்கிறேன். மூங்கில் குருத்துத் தின்பதற்கு ரொம்ப ருசி. ஆனால் கல்லும் மண்ணும் கூட இந்த உடம்புக்கு இனி ஒத்துக் கொள்ளும் என்றே எண்ணுகிறேன். இது எங்கள் வழி. ஆனால் குமாரா! நீ இப்படி ஆசிரமத்தின் எல்லை தாண்டி இங்கெல்லாம் துணையில்லாமல் வர லாகாது. யக்ஞதேவர் எங்களைப் போன்றவர்க்கு ரொம்ப ப்ரியமானவர். உன் பெற்றோர் உன்னை அவரிடம் ஒப்படைத்திருக்கும் பொறுப்பை நீயே சோதிக்கக் கூடாது.” அது சொல்லிவிட்டு, மெதுவாய்த் தான் வந்த வழியே சரிந்த நடையில் சென்று மூங்கில் புதர்களிடையே மறைந்தது. அதன் குட்டை வால் சும்மாயிருக்க முடியாமல் ஆடிற்று. கொம்பில்லை. பெண்மான்.

அதன் விழிகள் அவனுக்குப் பாமினியை நினைவு மூட்டின. பாமினி அவன் அக்கை.

அவன் சிறியவனே யானாலும் பாமினியின் திருமணம் பற்றி அவன் பெற்றோர்களின் பதைபதைப்பை ஊமைக் கனவாக உணர்வான். இப்பவே அவளுக்குத் திருமணம் ஆகியிருக்க வேண்டும். அல்லது அவளுக்காக நியமிக்கப் பட்டவன் குருகுல வாஸ்த்தினின்று திரும்புவதற்கு எதிர் பார்த்துக் கொண்டிருத்தல் வேண்டும். ஆனால் அவள் வரன் இன்னும் நியமிக்கப்படவில்லையே! g

குருகுல வாஸ்ம் முடிந்தவுடன் முறைப்படி நடை யாகவே நாடு யாத்திரையிலிருந்து திரும்பிவரும் பிரம்மச் சாரிகளைத் தேடிக் கொண்டிருந்தனர். அவர்களில் பெண் ணுக்கு ஜாதகனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்பவே முறை பிழறிப் போனதுதான். மணமுடிந்து பெண் ருதுவாகி, புக்ககம் அடையும்போது வதுக்களிடையே வயது வித்யாசம்,