பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 & லா, ச. ராமாமிர்தம்

இருபது இருபத்தியிரண்டுக்குக் குறையாது. நீண்ட காலம் கிரஹஸ்தாசிரமத்தில் இருந்து அதன் தருமங்களாய அதிதி ஆராதனை, மாமனார் மாமியார் வழிபாடு, புத்திரப் பேறு எல்லாம் நடந்தபின் வரணாசிரமம் இருந்து, கடந்து, ஜன்மாவின் கடைசி நிலை காவியைக் கணவன் ஏற்குமுன் மஞ்சளும் குங்குமமும் கலையாமல் கூந்தலில் பூவும், மடியில் தேங்காயும் திரண்டு, அவள் ஜீவன் சுமங்கல்யப்ராப்தி அடைந்துவிடும். ஏதுக்கும் குறைவில்லை. அந்த நாளின் ஆசாரம், வாழ்க்கையின் நெறிமுறை, நேர்மையின் விளை வாகிய உடல், மன ஆரோக்யம் அப்படி.

ஆனால் யாவற்றைக் காட்டிலும், பாமினியின் பெற் றோரை அரித்துக்கொண்டிருந்த திகில், காலகதியில் யுகச் சந்திகளில் நேரப்போகும் வாழ்க்கையின் சீர்குலைவுக்கும் தர்மச்சிதைவுகளுக்கும் ஆன்றோர்கள், தீர்க்கதரிசிகள் இப்பவே எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் களுடைய முதல் எடுத்துக்காட்டுக்கு, அவமானச் சின்னத் துக்கு நாம் இலக்காகி விடுவோமோ?

அவச்சொல்லுக்கு அப்படி அஞ்சிய காலம் அது.

முதல் நாள் பாடம் துவங்குகிறது.

“மகனே! நான் சொல்வதைத் திரும்பச் சொல்: “மாதுர் தேவோ பவ:”

“மாதுர்தேவோபவ:”

“பிதுர்த் தேவோ பவ:”

“பிதுர்தேவோபவ:”

“குரு தேவோ பவ:”

“குருதேவா! உங்கள் ஸ்தானம் மாதா பிதாவுக்குப் பின்னாலல்லவா வருகிறது.”