பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



2 < 237


“அதைப்பற்றி என்ன ஸந்தேகம்? அன்னையும் பிதாவும் தான் முதல் தெய்வங்கள்.”

“அப்படி ஆனால் நான் தங்களிடம் வரவேண்டிய அவசியமே யில்லையே! என் பெற்றோர்களைப் பிரியாமல் அவர்களை வழிபட்டுக் கொண்டு, நான் அவர்களோடேயே இருக்கலாமே!”

“குமாரா ஒரு ஜன்மாவை உருப்படுத்தி அதன் தர்மத் தில் அதற்கு வழிகாட்ட குரு தேவைப்படுகிறார். இந்தப் பூமியில் நீ தோன்றியதற்குக் காரணம் உன் மாதாபிதா, அவர்கள் இல்லாமல் நீ இல்லை, ஆகையால் அவர்களுக்குத் தெய்வநிலை. நீ எதற்காகப் பூமியில் பிறந்தாயோ அந்தக் கர்மாக்களை உனக்குச் சுட்டிக் காட்டி அவைகளை நீ வஹிக்க ஞானத்தையும் மனோபலத்தையும் குரு போதிப்ப தால் அவருக்குத் தெய்வநிலை.”

“ஏன், என் பெற்றோர்கள் எனக்குச் சொல்லிக் கொடுக்க முடியாதா?”

“அவர்களை மீறின விஷயங்களும், நீ கற்றுப் பேண வேனது உள. தவிர புத்ரபாசம், பெற்றோர் பாசம், சிஷ்ய னுடைய மாணவ சிந்தைக்கும், சிரத்தைக்கும், நாளடைவின் தவ நிலைக்கும் குறுக்கீடாகி, அதனால் பாபகிருத்யங்கள் நீங்கள் அறியாமலே நேர ஹேதுவாகும். உனக்கு நேரும் ஸந்தேகங்களை நீ கேட்கலாம். கேட்க வேண்டும். தீர்த்து வைக்கத்தான் குரு இருக்கிறார். அப்படியும் அவரால் தீர்க்க முடியாத சந்தேகங்களைத் தெளிய, தெளிவிக்க அவருடைய ஞானாசிரியனை அவர் நாடுவார். ஞானவிசாரணை அளப் பரியது. ஆழம் அறிய முடியாதது. ஆனால் ஆரம்பத்தில் நம் முன்னோர்கள் காட்டிய வழியில் அவர்கள் நடந்த பாதையில், அவர்கள் மிதித்த சுவடுகளைப் பின்பற்றினால் தான் ஆரம்ப சந்தேகங்கள் தாமே அழிந்து உன்புத்தி