பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ராசாத்தி கிணறு ❖ 15


கிணறு கேக்க சந்தோசமாயிருக்குது. நல்ல ரோசனை.
அதுக்கு நீ மம்முட்டியும் கட்டப்பாறையும் தூக்கியாந்தால்
எப்படி? வெடி வெச்சுத் தண்ணியை வரவழைச்சாப்
போச்சு. துட்டுக்குப் பாக்காதீங்க மாமா. அப்பாரு ஒரு வடம்
அஞ்சு பவுனுலே கல்யாணத்துக்குப் போட்டிருக்காரே, இந்த
மாதிரி சமயத்துக்கு, விவசாயிக்கு உதவறத்துக்குத்தான்.”

“அதெல்லாம் நல்ல பேச்சுத்தானம்மா. ஆனால் இந்தக்
காரியத்தை நான் என் கையாலேயே எந்தக்கை அவளைக்
கொன்னுச்சோ, அத்தாலேயேதான் செய்தாக வேண்டும்.”

“மாமா இந்த வயசுலே இந்த சவாலெல்லாம்
உங்களுக்கு வேணாம்-ஏ பக்கத்துலே கல்லாட்டம் நின்
னுட்டிருக்கையே. வாயைத் திறந்து நீயும் எதாச்சும் சொல்
லேன்.”

“ஏ பொண்ணே, அவன் மேலே ஏன் அனாவசியமா
பாயறே. அவன் தாயை இழந்துட்டு தவிச்சுட்டு இருக்கான்.
இதை நான் இப்படி என் கையாலேயேதான் செய்தாவணும்.
என்னக்கப்படி உத்தரவு ஆயிருக்குது.”

“உங்களுக்கு யாரு உத்தரவு கொடுத்தது?”

“உனக்கேன் அந்தக் கவலையெல்லாம்? தவிர வெடி
வெச்சால் இருக்கற தண்ணியையும் இளுத்துகிட்டுப்
போயிடும். சரி அதெல்லாம் உனக்கெதுக்கு?”

கிழவன் அஸ்தியிலிருந்து சற்று நீளமாய்க் கிடைத்த
எலும்புத்துண்டு ஒன்றைப் பொறுக்கி ஆச்சர்யத்துடன்
பார்த்துவிட்டு அதை சிதை நடுவில் சாம்பரை ஒதுக்கிவிட்டு
அங்கு கிடைத்த தரையில் அதன் கழுத்து தெரியும் வரை
நட்டான். பிறகு அவன் கணக்கிலே ஏதோ சதுரமும் வட்டமு
மாய்ச் சேர்ந்து ஏதோ ஒரு கணக்கு கோடரியின் கூரில்
ஒரு பெரிய சுற்றளவை வரைந்தான். அவன் ஏற்படுத்திக்