பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 : லா. ச. ராமாமிர்தம்

தும், கால்கள் பூமியில் பதியாமல் அந்தரத்தில் நீந்தின. மானின் பக்கலிலேயே நீந்திற்று. நீந்திப் பாய்ந்து புலி, அதன் முழு கனத்துடன், கனத்தின் வேகத்துடன் மான்மேல் விழுந்த தும் இருவயிறுகளும் அணைந்தன. புலி, தன் மூர்க்கத்தின் ஆசையில், கோரைப்பற்களை இரையின் கழுத்தில் பதித்த தும், மான் தலைசாய்ந்ததும்.

பையன் கீழே விழுந்து நினைவிழந்தான். அவன் கண் திறந்த போது, அரசமரத்தடியில், கயிற்றுக் கட்டிலில் கிடந்தான். யக்ஞதேவர் அருகே அமர்ந்திருக்க, குருமாதா அவன் வாயில் ஜலத்தை ஊற்றிக் கொண்டிருந் தாள்.

“குழந்தாய் மெதுவாக, மெதுவாக, கங்காஜலம் யாவதுக்கும் ஒளவு:தம்.”

மானின் தொங்கிய தலையும் அந்தக் கோரமும், மடை திறந்த நினைப்பில், அடித்துக்கொண்டு வந்ததும், துக்கமும் பயமும் பீறிட்டது.

“மானைப் புலி தின்றுவிட்டது. என் நண்பன் போய் விட்டான்” தேம்பினான்.

“மகனே நீ கண்ட காr) உனக்கு வந்திருக்க வேண்டாம். நீ ஆசிரமம் தாண்டியிருக்கக் கூடாது.”

“என் நண்பனும் அதைத்தான் சொன்னான்.” “ஒ. அது சொல்லிவிட்டதா? நீதான் கேட்கவில்லையா?” “குருதேவா இனி நான் என்ன செய்வேன்?” “நாம் என்ன செய்ய முடியும்? ஆசிரமத்தின் திக்கில் ஓடிவந்திருந்தால் ஒருவேளை அது தப்பித்திருக்கலாமோ. எதிர்த் திக்கில் ஒடிற்றோ? அதற்கு விதிமுடிய வேளை வந்து விட்டது.”