பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 & லா. ச. ராமாமிர்தம்

தனிப்பட்ட முறையில் குறிப்பிடும்படி எழுதியிருப்பின் என் நிறத்தின் தன்மையை யூகித்துக் கொள்ளுங்கோளேன்.

:: ※

இம்மாதிரிப் பொடி விவரங்கள் இந்த வரலாற்றில் அங்கங்கு தோன்றுகையில் “இந்த மனிதனுக்கு இந்த வயதில் இவ்வளவு தற்பெருமையா?” என்று உங்களுள் கேலி எழக் கூடும். எழட்டுமே. ஆனால் இவை தத்ரூபத்துக்கு முயற்சிக் கும் உண்மை நகாசுகள். சில சமயங்கள் எழுதும் வாகில் தாமாகவே வீழ்ந்து விடுகின்றன. இவைகளுக்கு நான் மன்னிப்புக் கோரப் போவதில்லை.

 :k

நாங்கள் ஏழ்மையான குடும்பம் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமையே படுகிறேன். என் முன்னோர் களும், என் பெற்றோர்களும் பட்டினி பார்த்தவர்கள். நான் அவர்கள் மாதிரி கஷ்டப்படவில்லை. ஆனாலும் வறுமை என்னென்று எனக்கு நன்கு தெரியும்.

$:

நாட்டின் நிலைமை ஒன்றும் மிக்க மாறிவிடவில்லை. ஸ்வதந்தரம் கிடைத்து ஐம்பது வருடங்களுக்கு மேலாகியும் பட்டினிச் சாவுகளைப் பற்றிச் செய்தி படிக்கிறோம். என்ன சுதந்திரக் கொண்டாட்டம் வேண்டியிருக்கிறது, தலை குனிவதைத் தவிர?

※ Sk ※

பத்துப் பாத்திரம் தேய்க்க வரும் வேலைக்காரியின்

புருஷனுக்கு சர்க்கரை வியாதி கண்டிருக்கிறது. ஆஸ்பத்திரி யிலிருந்து வீட்டுக்கு எடுத்துப் போகச் சொல்லிவிட்டார்கள்.