பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 & லா. ச. ராமாமிர்தம்

முத்து எழுத்து. கறுப்பு மசியில் பெரிய நோட்புக்கில் எழுதி

வைத்திருந்தார்.

குலதெய்வத்தை ஒரு சமயம் தோத்தரித்து

ஒரு சமயம் கெஞ்சி ஒரு சமயம் தாஜா பண்ணி ஒரு சமயம் அதட்டி ஒரு சமயம் திட்டி ஆனால் எப்பவும் அவைகளினூடே ஒரு மூர்க்கமான பரிவுடன் தண்ணொளி வீசிக் கொண்டிருக்கும்.

-

லால்குடி எனும் திருத்தவத்துறை பாடல் பெற்ற ஸ்தலம். ஸ்வாமி சப்தரிஷிசன், அம்பாள் ப்ரவர்த்த ஸ்ரீமதி, அல்ல வெறும் ஸ்ரீமதி, தமிழில் பெருந்திரு. பெருந்திருதான் எங்கள் குலதெய்வம். லால்குடியில் வீட்டுக்கு வீடு ஒரு சப்தரிஷிக்கோ, ஒரு ஸ்ரீமதிக்கோ பஞ்சமில்லை.

என் தகப்பனார் பெயர் ஸ்ப்தரிஷிசன்.

அம்மா பெயர் ஸ்ரீமதி.

k ※

முன்னோர் காலத்திலிருந்தே எங்கள் குலதெய்வத்துக்கு தினசரி வாழ்க்கையிலேயே மாறாத பங்கு எப்படியோ உண்டு என்று நான் சொல்லாவிடின் என் எழுத்துக்கே முழுமையில்லை.

k -

பெருந்திரு மேல் என் மூதாதையரின் வழி வழி மூர்க்கப் பாசம் (பக்தியென்று எப்படிச் சொல்வது, அதைவிட நெருக்கமானது) அதன் பாதையில், என் முறை வந்ததும்,