பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 : லா. ச. ராமாமிர்தம்

அம்மா எவ்வளவோ ஜாடை காட்டினாலும் நெற்றியில் நெத்தினாலும் நகர மாட்டேன். கலத்திலிருந்து வாய்க்கு ஒவ்வொரு கவளத்தையும் பார்த்துக் கொண்டிருப்பேன், “வயித்தை வலிக்கிறதே, இதுகளைத் தூங்க வைக்கப் படாதா?’ என்று திட்டிக் கொண்டே என் வாயில் இரண்டு ஊட்டுவார். என்ன ருசி! என்ன ருசி!

இந்த உச்சிஷ்ட ப்ரஸாதமும் சேர்ந்துதான் என் எழுத்து.


பிள்ளைகளுடன் இருக்கப் பட்டிணம் வந்தார். பத்து, பதினைந்து நாட்களுக்கு மேல் தாத்தா தங்கமாட்டார். பெருந்திரு தரிசனம் இல்லாமல், அதற்கு மேல் அவரால் இருக்க முடியாது.

அடுத்த வேளை சோற்றுக்கு வழி எங்கே என்று தெரியாது. கால் ரூபாயோ, கால் ஸ்பூன் கடுகோ அடுத்த வீட்டில் கடன் வாங்க ஆணாகட்டும், பெண்டிராகட்டும் படியிறங்க மாட்டார்கள். ஒரு காலை மறுகால் மேல் மடித்துப் போட்டு வயிறு பள்ளமாய்க் குழியும்-ஆனால் அவன் என்ன கிழிச்சுட்டான் இவன் என்ன சாதிச்சுட்டான். அவனைக் கேட்கனுமோ, நம்மையேதான் அவளுக்குக் கொடுத்துட்டோமே, பிச்சை வேறு கேக்கனுமோ? மாட்டேன்.

எல்லோரும் ராவணன் கr). ஒரு வரட்டு வீறாப்பு. தெய்வத்தையே சேவகனாகப் பாவிக்கும் ஒரு முரட்டு சகஜம். யதார்த்தத்துடன் ஒட்டாத ஒரு அசட்டு அதீதம்.