பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 & லா. ச. ராமாமிர்தம்

சிறுகதையில் ஒரு புதுக்குரலாக, இனம் கண்டு கொள்வோ ரால் பாராட்டப்பட்டேன்.

※ ※

ஆங்கிலத்தில் மஞ்சேரி எஸ். ஈஸ்வரன் என்னைக் கண்டுபிடித்ததாகச் சொல்லிக் கொள்வார். அப்படியானால் தமிழுக்கு என்னைத் தி.ஜர. தந்தார். தி.ஜரவைப் பற்றிக் கேள்விப்பட்டவரேனும் இந்நாளில் எத்தனைபேர் இருக் கின்றனர்? கலைமகள் ஆபீஸில் மஞ்சரிப் (Reader’s Digest மாதிரி) பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தார். என்னை எழுத முதுகைத் தட்டிக் கொடுத்தவரே அவர்தான். அதற்கு முன் சக்தி பத்திரிகை ஆசிரியராக இருந்தபோது, ‘நீ எதை எழுதியேனும் கொண்டுவாடா நான் போடுகிறேன். இப்படி யார் சொல்வார்கள்?

தி.ஜ.ர. என் மானஸ் குரு.

யாருக்கும் அவரவர் துறையில் குரு வேண்டும். குருவிடம் தினம் பாடம் கேட்கிறேனா இல்லையோ, தினம் சொல்லிக் கொடுக்க அவரிடம் பாடம் இருக்கிறதோ இல்லையோ, குரு என்கிற சொல்லே துணை. மாதா, பிதா, குரு, ஒம் இந்த இரண்டு அக்ஷர மந்திரங்களுக்கு மிஞ்சின துணையில்லை.

ஏன் தமிழிலேனும் எழுதித்தான் ஆக வேண்டுமா? என்பாடு அப்போது அப்படி ரூ 5 ரூ 10/- ஸன்மான மென்கிற பெயரில் அந்தப் பிச்சைக் காசு (அதற்கு எத்தனை முறை போய்த் தலையைச் சொறிய வேண்டும்! “இன்று போய் நாளை வா!') குடும்பத்துக்கு வேணுமே! S.S.I.C. படித்துவிட்டு வேலையுமில்லை. வாரத்துக்கொரு முறையேனும் எழுத வேண்டாமா?-ஒரு சிற்றப்பா இரைவார்.