பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் & 255

இந்தப் பிறை சற்று விநோதமானது. லா.ச.ராவுக்கு முன்னோடி கிடையாது. லா.ச.ராவைப் பின்பற்றவும் முடியாது. லா.ச.ராவிற்குப் பின்னாலும் கிடையாது.

லாசராவின் விஷயம், வெளியீடு, நடை சொல்லாட்சி, தனித்வம் லா.ச.ராவோடு போய்விடும்.

காத்திருந்த தவம் பலித்ததம்மா-தவத்துக்கே ஒரு அகந்தை உண்டு.

※ :k

ஆனால், நான் எழுதியவையெல்லாம் இலக்கியமாகுமா என்று காலம்தான் நிர்ணயிக்க வேண்டும்.

அதைப்பற்றி நான் கவலைப்பட முடியாது. கவலைப் பட்டுத்தான் ஆகவேண்டியது என்ன? சற்று சூழல் மாற மாற (டி.வி. internet, et யுகம், மக்களின் மறதி எதுவுமே நிலையில்லை என்பதை உணர்கிறோம்.

கடைசியில் இவ்வளவு எழுதினேன். ரஸிகர்கள் இன்றும் வீட்டுக்கு வந்து போயிக் கொண்டுதான் இருக் கின்றனர். ஆனால் என்னத்தைச் சாதித்தோம் என்கிற அசதி தான் தோன்றுகிறது.

அன்றன்று அந்தந்த நிமிஷத்தை நினைவுடன் முழுமை யுடன் வாழ்ந்தாயா? சந்தோஷப்பட்டுக் கொள்.

ஆனால் சாதித்தவரை சாதித்ததுதான் பிறந்ததற்கு. அவரவர் வழியில் அவரவர் பங்கு. வாழ்க்கை தன் கப்பத்தை வாங்காது விடாது. ஆகையால் அதை முழுமனதுடன் செய்து அதனிடம் கொடுத்துவிடு.