பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 : லா. ச. ராமாமிர்தம்

ஜூலை 1, 1946 எனக்குத் திருமணம் நடந்தது. திருமணம், வாழ்க்கையிலேயே ஒரு பெரிய திருப்புமுனை. எனக்கு நடந்த திருமணத்தைச் சொல்கிறேன். அன்றைய சம்பிரதாயங்களை அடையாளம் தெரியாதபடி இப்போது மாறிவிட்டன, என்று சொல்லிவிட்டு மேலே போகிறேன். உடல் ஆரோக்கியத்துக்கே ஒரு தனி அழகு உண்டு. என் மனைவியாகப் போகிறவள் அதில் நன்கு செழித்திருந்தாள். அதில் எனக்கும் குறைவில்லை.

நாங்கள் ஒற்றுமையான ஜோடி என்று சொல்ல முடியாது. என் அம்மா, அப்பாவையும் சொல்ல முடியாது. முள் முனை ஆடிக் கொண்டேதான் இருக்கும். அப்படித் தான் இருக்க வேண்டும். கணவன் மனைவியினிடையே காதல் சாத்தியமில்லை, கூடாது. காதல் என்பது உண்டு. அது ஒரு தஹறிப்பு. உயிருடன் சுட்டெரித்துக் கொண்டே யிருக்கும் தஹறிப்பு. மாட்டிக் கொள்ளாதே. ஆனால் அதில் விதியின் சம்பந்தமுண்டு. அதை என்னென்று ஒவ்வொரு வனும் அறிய வேண்டும். ஆனால் அதைப் பட்டவர்க்கும் அதனால் பலனில்லை. அது சிவபெருமானின் நெற்றிக்கண். அதனருள் உன் மேல் பட்டு சுட்டெரிந்து கொண்டேயிரு. It is better to have loved and lost than never to have loved at all.

>k ※ Sk

அனுபவ ரீதியில் காவியங்கள் கவைக்குதவாதவை. ஆனால் உலகின் நடப்புக்கு பரஸ்பர மனித உறவுக்கு அவை அத்யாவசியமானவை. அதனால்தான் உலகில் பாஷைக்குப் பாஷை பக்தி, பிராணி, மனிதன் என்று சஹல ஜீவன் களிலும் காவிய அம்சம் பரிமளிக்கிறது.

k >k

ஆண், பெண், சிசு என்கிற திரிமூர்த்தத்தின் அடிப்