பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



நான் & 257

படையில்தான் உலகம் இயங்குகிறது. அதன் அடிப்படை யில்தான் குடும்பம் என்கிற பல்வேறு உறவுகளின் விஹாசம். இதைத்தான் என் மூதாதையர் வாழ்க்கையின் பல்வேறு வண்ணங்களில் தெய்வம் எனும் முனைப்பில் கண்டனர். அதுவும் ஒரு உறவுதான். என் எழுத்தில் இதனால்தான் இதைப்பற்றி அதிகம் காண்கிறீர்கள். என் மூதாதையர் யாவுமே அதீதமானவர்கள். நான் அவர்களின் சரித்ரீகன் ஆதலால், எழுதுவதற்குத் தனியாக விஷயங்களைத் தேடிக் கொண்டு போகும் தேவை எனக்கு இல்லாமல் போய் விட்டது.

ஆச்சு எங்களுக்குக் கல்யாணம் நடந்து 55 வருடங் களுக்கு மேலாகிவிட்டன. நல்லது பொல்லாது, சண்டையோ பூசலோ, இத்தனை வருடங்களுப் பின் என்ன தெரிகிறது? எது எப்படியோ, இனி உனக்கு நான், எனக்கு நீ மிஞ்சியது இந்த பரஸ்பரம். இதுவே போதும். இதுவே பேறு.

இந்தக் குடும்பத்தின் ஒரு கட்டத்தில் மரணம் சற்று அதிகமாகப் புகுந்து விளையாடி விட்டது. உங்கள் எழுத்தில் சாவைப் பற்றி அதிகம் வருகிறது. இது அனுதாபத்திலா, குற்றமா? எது மனதில் ஆழமாய்ப் பதிகிறதோ அதைப்பற்றித் தானே எழுத முடியும்? இதற்கு வேறு நியாயம், நியதி. சமாதானம் என்று தனி உண்டோ? அதைக் கல்பித்தே னானால், அது என் குற்றம். தெய்வம், விதி என்று புரியாதன மேல் பழிபோட முயற்சி. -

உலகில் நீ வாழ, முன்னேற, உனக்குச் சிந்தனையும் அதற்குத் துணை எழுத்து என்றும் கொடுத்திருக்கிறது.

எழுத்து அறிவித்தவன் இறைவனாவான்.