பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 : லா, ச. ராமாமிர்தம்

சிந்தனை யார் பிறப்பித்தது என்று இறைவனே இன்னமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறான். அவனன்றி ஒர் அணுவும் அசையாது. ஸர்வந்தர்யாமி ஆனால் அவன் இன்னமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறான் எதை? எதற்கு? சிந்திப்பதுக்கென்றே தrவிணாமூர்த்தி ஸ்வரூபத்தில் அவனை உட்கார்த்தியாகி விட்டது. உன் நினைப்புக்கு அவனை எழுப்பக் கையைச் சொடுக்கிவிட்டுப் போங்கள்.

x: :k >k எழுதுகையில் சந்தோஷமாய்த் தானிருக்கிறது. நான் எழுதும் முறையில் அந்த நேரத்துக்கு எழுதும் விஷயத்தைத் தவிர மற்றவை எனக்கு நினைப்பிருப்பதில்லை. அக்கப் போர்கள், கோபங்கள், குரோதங்கள் நெஞ்சில் அலைவ தில்லை. மனதைக் கெடுப்பதில்லை.

தவமென்பதே என்ன? ஒரு எண்ணம் ஒரே எண்ண மாய் அப்யாசத்தில் அதை மாற்றும் வீர்யத்தில், அதுவே என நிரம்பி வழியும் அதன் ஒருமைப்பாடுதான் தவம். எனக்கு, என்னுடையது என ஒன்றை ஒருமையாக்குவது லேசல்ல.

ஆகவே, எப்படியோ வருடங்கள் உருண்டோ, தத்தியோ, அங்கப்ரதக்ஷணம் பண்ணியோ ஒடிவிட்டன. இப்படி ஒரு காலத்து நடை. அப்படி ஒன்றும் எட்டின காலமுமில்லை. இன்னமும் உபயோகத்திலிருக்கிறது. ஆனால் எனக்குத் தெரியாமலில்லை. குற்றமுள்ள நெஞ்சு கண்ணை மூடிக் கொண்டுவிட்டால் காலம் அஸ்தமித்து விடுமா?) இதோ விளிம்பில் நிற்கிறேன். இனி இப்பவோ, எப்பவோ அந்தண்டை என்னவோ? ஆனால் அறுபத்திஐந்து வருடங் களுக்கு மேலாக எழுதிக் கொண்டிருக்கிறேன். எதற்காக? அவசியமுமில்லை. என் கை எப்போதுமே வேகமில்லை.