பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



நான் & 259

நான் மெதுவாக எழுதுபவன். ஆனால் எழுதிக் கொண்டே யிருப்பவன்.

*  எழுத என்ன இருக்கிறது? ஸர்வ ஜீவ கர்த்தாவாய சூரியனைத் தாண்டி அறியவோ எழுதவோ என்ன இருக் கிறது? அப்படியும் எழுதுபவர் எழுதிக் கொண்டுதாணிருக் கின்றனர். எழுதினதைப் படிப்பதற்கு யாரேனும் ஒருத்தனே னும் இருக்கிறான். அவனும் இல்லாவிடில், ஏற்கனவே சொல்லிவிட்டேனே, எனக்கு நான் இருக்கிறேன்.
* ※

பார்த்ததையே பார்த்து சாப்பிட்டதையே சாப்பிட்டு பேசினதையே பேசி எண்ணியதையே எண்ணி சே!

*  நாம் யாருமே எண்ணங்கள் தாம். எண்ணம் என்று ஜனித்த பிறகு நமக்கு அழிவேயில்லை. அருவத்தில், ஆகாயத் தில், காலநேமியில், ஸ்தூலத்தில் மாட்டிக் கொள்ளும் வரை, காலம், இடம் தாண்டி எந்த நிபந்தனையுமற்று இல்லை, இருக்கிறேன் என்கிற சந்தேகங்கள் கூட அற்று ப்ரக்ஞையின் முழுமையில் சஞ்சரிக்கிறோம். இப்படித் தவிர நம்மைப் பற்றி வேறெப்படியும் நினைக்கத் தோன்றவில்லை அல்லது இப்படியும் நினைக்கக் கூடும் அல்லவா?


எண்ணங்கள் அழகிய பூக்கள். பூக்கள் நிர்மாலியங் களாகி இதழ்கள் வாடி வதங்கி உதிர்ந்தபின். அவைகள் வாழ்ந்ததன் பலனாய், பயனாய், எஞ்சி கமழும் மணங்கள்.

  • $: