பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ராசாத்தி கிணறு ❖ 17


கிழவன் கோடரியால் பூமிமேல் போட்ட முதல்
வெட்டில், அது பாறாங்கல்லில் பட்டு, அந்த அதிர்ச்சியின்
வேகத்தில் அவன் ஒரு பக்கம், கோடரி ஒரு பக்கம் என
வீழ்ந்தான். ஆசை தப்பித்தது. ஒரு கண்ணிலேனும் கல் சிதர்த்
தெறித்துக் கண் போயிருக்கும்-கோடரியையும் தன்னையும்
கிழவன் பொறுக்கிக் கொண்டு அப்புறம் எச்சரிக்கையாய்
கொத்திக் கொத்திப் பள்ளத்தை அகலமாக்க ஆரம்பித்தான்.

பரதேசி, குகையிலிருந்து வெளியே வந்து கிழவன் படும்
பாட்டை சற்று நேரம் பார்த்துவிட்டு உள்ளே சென்று
விட்டான்.

தம்மை அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல...

குறளையும் குட்டையும் கிழவனுக்குத் தெரியாது.
அவனுக்குத் தேவையுமில்லை. இந்தக் கதையும் சொல்லும்
எனக்குத் தெரிஞ்ச பாசையையும் சொருகிவிட்டால் பெரிய
வனாய் விடுவேனா? இங்கே என்ன நடக்குது தெரியு
மில்லே. இல்லே உங்களுக்குத் தெரியப் போவதுமில்லே.
எனக்கும் அதன் பெரிசு தெரியப் போவதில்லே இங்கே
நடக்கறது தவம்.

தண்ணி பேரில தோண்டறேன். தண்ணி வருமோ
வராதோ தெரியாது. ஆனால் தோண்டியாவணும். அப்படிப்
போற உசிர் போவணும்னா போவட்டும். தோண்டியே
போவட்டும்-பரதேசி சொன்னது கொஞ்சம் புரியறாப்பல
இருக்குது. தண்ணி முக்கியமில்லே. தோண்டறதுதான
பெரிசு. நான் தோண்டியிருக்கறது பூமியின் வவுறா ராசாத்தி
யின் வவுறா? போகப் போகத்தான் தெரியணும்.

வழிப்போக்கர், தெரிஞ்வங்க, தெரியாதவங்க, வேணைய
பேர் எட்டிப் பார்த்தனர். அவன் மறுத்ததனால் அவன்
கோபத்தை சம்பாதித்துக் கொண்டனர். ஏளனத்தையும்