பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் & 263

“என்ன ராமு, அழுவரே உடனே சிரிக்கறே.” கைகளை விரிக்கிறேன். பேசவரல்லியே!

※ *

நாலு தென்னைகளுக்கு நடுவே ஒரு கிணறு பதுங்கி யிருக்கிறது. அதற்கே இந்த வெய்யில்போல். இதன் தண் ணிரைக் குடித்திருக்கிறேன். கற்கண்டு. முருகன் வானரம் போல் மரத்தில் ஏறி இரண்டு மூன்று இளநீரைப் பறித்துப் போடுகிறான். அவன் கைக்கு எங்கிருந்து கத்தி வந்தது? இங்கேயே சொருகி வைத்திருக்கிறான்கள். ஒருத்தரும் எடுக்க மாட்டான் போலும். சீவிப் பொத்துக் கொடுக்கிறான். இந்த ருசி பட்டணத்தில் எங்கே வரும்?

அதேபோல், நடுவயலில், அப்போதுதான் பறித்துவந்த பச்சை வேர்க்கடலையை வைக்கோலில் பொசுக்கி:

“துண்ணு துண்ணு, இதெல்லாம் உனக்குப் பட்டணத் தில் கிடைக்குமா பாரு’ என்று கேலியும் பிரியமும் சேர்ந்து கலவையில் கேட்பான்.

முருவா, நீ இன்னும் உயிரோடு இருப்பியா? அப்பவே நீ என்னை விட ரெண்டு வயது மூத்தவன். ஆனால் வயசை வெச்சு ஆயுசை அளக்கிறது தப்பு. அப்படியே நீ உயிரோடு இருந்தாலும் நீயும் நானும் இன்னும் எத்தினி நாளிருக்க முடியும்? சித்தரபுத்தன் நம்ம சீட்டை எடுத்தாச்சு என்னால் நடக்கவே முடியல்லே முருவா! இத்தனைக்கும் வாதம் இல்லே.

 sk

வயல் வரப்புங்களுக்கு இந்தாண்டை மைதானத்துள் சந்தவெளி அம்மன் இருக்கா, அம்மன் என்னவோ சின்னது தான், ஆனால் பவர் ஜாஸ்தி. ஊருக்குக் காவல் தெய்வம். சுத்தி மதில்கட்டி நடுவுலே சூரியனுக்கும் மழைக்கும்