பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ❖ லா. ச. ராமாமிர்தம்

வங்க விதி இன்னும் தெரியாமல் இருக்கறத்துலேயே,
குடமும் தாம்புக்கயிறுமா வந்துட்டவங்க எத்தினி பேர்!
கிடச்ச மட்டும் ஆதாயம்!

ஒரு வழியா பொங்கலும் சீறலும் அடங்கி, தண்ணி
தன் மட்டம் காண ஆரம்பிச்சுட்டுது. கண்டுதானே
ஆவணும்!

ஒரு சின்ன அலை எழும்பி ரெண்டு பொணங்களையும்
தானே கக்கிட்டுது.

கிழவன் முகம் சாந்தமா, எத்தினியோ நாளா காத்திருந்த
எதையோ கண்டுவிட்ட சந்தோஷம். சாவறதுக்கு முன்னா
லேயே கிழவன் உள்ளுக்குக் குளிர்ந்து போயிருந்தான்.

பரதேசி முகத்துலே ஒரு அலஷியம். எதுக்கும்
கலங்காமல் “பூ! இவ்வளவுதானா?”
என்கிற மாதிரி.

ஆகவே ராசாத்தி கிணறு பிறக்கறத்துலேயே மூணு காவு
வாங்கிருக்கு. கிழவிக்கும் கிழவனுக்கும் காரணம் யாருங்
கறதும் தெரிஞ்ச விஷயம். ஆனால் இந்தப் பரதேசி?
பரதேசிக்கும் கிணத்துக்கும் நிச்சயம் சம்பந்தம் இருக்குது.
நான் சொல்றேன். யோசித்துப் பாருங்க. கிழவன் பரதேசி
சாதா ஆள் இல்லே. காரணம், காலம், காரியம் மூணுமே
தெரிஞ்சு வெச்சிருப்பான்.

கிணறு எங்கே தோண்டனும்னுகூட பரதேசிதான்
கிழவனுக்குச் சொல்லியிருப்பான். கிழவனுக்கு அம்மாம்
மூளை ஏது? அங்கே தண்ணி இருக்குது தோண்டினால
வரும்னு அவனுக்குத் தெரியும். அதுமட்டுமில்லை. அங்கே
சிலையிருக்குதுன்னு முன் கூட்டியே அவனுக்குத் தெரியும்.
அந்த சிலையைத் தான் அடையணும்-இதுதான் பரதேசியின்
அடிப்படை சூழ்ச்சி. இல்லாட்டி அவ்வளவு கணக்கா அந்த