பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



2


உறவு


அவள் விரைந்து நடந்து கொண்டிருந்தாள்.

அடிக்கு அடி, நடையில் வேகம் கூடிற்று.

அப்புறம், நடையும் ஒட்டமுமாக நடந்தாள்.

இன்னேரமே என்ன ஆயிருக்குமோ?

“குழந்தே! குழந்தே!!”

திடுக்கிட்டுக் குரல் திக்கில் நோக்கினாள்.

“உன்னைத்தான். கொஞ்சம் இங்கே வாயேன்!”

சாலையோரமாய் சற்று உள்தள்ளி ஒரு பூவரச அடி
மரத்தின் மேல் சாய்ந்தபடி, கால்களை நீட்டி ஒரு கிழவர்
உட்கார்ந்திருந்தார்.

அருகே வந்தாள்.

“ஐயா, என்ன வேணும்?”

“உட்காரு.”

“ஐயா, என் நயினாவுக்கு உடம்பு நல்லாயில்லேன்னு
சேதி வந்து, அவசரமாப் போயிட்டிருக்கேன்.”

“எங்கேயிருக்கார்?”

“பக்கத்து ஊரு இன்னும் ரெண்டு கல் நடக்கணும்.”