பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உறவு ❖ 29


கொஞ்சம் பயமாய்த்தானிருக்கு, போற இடம் எப்படி
யிருக்கும்னு தெரியாதில்லே! அதனால்தான் உன்னைத்
துணையிருக்கச் சொல்றேன்.

“ஐயா, எப்பிடி அவ்வளவு தீர்மானமாச் சொல்றீங்க?
பார்த்தால் அப்படித் தெரியல்லீங்களே! சோஸ்யக்காரன்
சொன்னானா?”

“சோஸ்யம் ஏதுமில்லை. எனக்குக் கொஞ்சம் நாடி
பார்க்கத் தெரியும். ஆனால் நான் இவ்வளவு சீக்கிரம்
எதிர்பார்க்கல்லே. காலையிலே எழுந்திரிச்சபோதே, கால்
கொஞ்சம் விறுவிறுன்னது. நடந்தால் சரியாப் போயிடும்னு
உலாத்த இந்தப் பக்கமா வந்தேன். திடீர்னு இடுப்புக்குக்
கீழே விளுந்துட்டுது. எப்பிடியோ நகர்ந்து நகர்ந்து இந்த
மரத்தடிக்கு வந்து சேர்ந்துட்டேன். உடனே கையைப்
பிடிச்சுப் பார்த்தேன். நேரமில்லேன்னு தெரிஞ்சு போச்சு.
இதுவரை ஒத்தரும் வல்லே. நீதான் வந்தே.”

“வீடு எங்கே சொல்லுங்க ஐயா. ஒடிப் போய் யாரை
யேனும் இட்டாறேன்.”

“உஷ். அதுக்கெல்லாம் நேரமில்லே. நீ வரதுக்குள்ளே
போயிடுவேன். இப்பவே கால் செத்துப் போச்சு. சில்லிப்பு
மேலே ஏறுது. உன்னை ரொம்பக் கேக்கல்லே. கொஞ்ச
நேரம்தான். பக்கத்தில் இரு, போதும். ஆனால் இதுவே
அதிகம்தான். என்னைப் பார்த்தால் அனாதைப் பிண
மாட்டமா இருக்கு? எனக்கு எல்லாம் இருக்கு.”

“அப்பிடி நான் ஒண்ணும் சொல்லல்லியே ஐயா!”
அவள் குரலில் அழுகை நடுங்கிற்று.

“மூணு பசங்க இருக்காங்க. நல்லப் பசங்க. மூத்தவன்
வெளியூரிலே வேலை பாக்கறான். அடுத்தவன் ஒரு
வேலைக்கு இன்னிக்குப் பேட்டிக்குப் போயிருக்கான்.

p"