பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ❖ லா. ச. ராமாமிர்தம்

நெருடிக் கொண்டே, “இது பளசுங்க. வாங்கி ரெண்டு
வருசமாவுது.”

“என் பேத்திகூட ஊதா உடுத்துவாள். நீ நடந்து
போவதைப் பார்த்தப்போ அசப்பில் அவள் மாதிரியிருந்தது.
அதனால்தான் கூப்பிட்டேன்.”

“அவங்க எங்கேயிருக்காங்க?”

“தெரியாது.” கையை விரித்தார். “பார்த்துப் பத்து
வருசமாச்சு.”

அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரிய
வில்லை. அவர் தொடர்ந்தார். “தாய் தகப்பனில்லை. ஒரு
வயசில் என்கிட்ட வந்து சேர்ந்துட்டா. நான் பெத்தாக்கூட
அத்தனை அருமையாயிருக்காது. அருமையா வளர்த்து நல்ல
இடத்தில்தான் கட்டிக் கொடுத்தேன்.”

“தண்ணி தாண்டியிருக்குதா? புருசன் புளைக்க வெளி
நாடு போயிட்டாரா?”

அவர் தன் உள்ளங்கையைப் பார்த்துக்கொண்டு,
“அதெல்லாம் ஒண்ணுமில்லை. சண்டை”

ஒரு அணில் அவரை உராய்ந்து கொண்டு இன்னொரு
மரம் ஏறிற்று.

“பிள்ளை வீட்டாருடன் மனஸ்தாபத்துக்குக் காரணமும்
வேணுமா? அவங்ககிட்ட நியாயம் இல்லாட்டியும், புள்ளை
வீட்டாருடன் சண்டை போட முடியுமா? நம்ம பெண் வாழ
வேண்டாமா? ஆனால் என் பேத்தி சமத்து. எங்கே எப்படி
நடந்துக்கணும்னு சொல்லாமலே அவளுக்குத் தெரியும்.
தாய் தகப்பன் இல்லாத புள்ளையில்லே! அவங்களுக்கு
ஆரம்பத்திலேயே அந்த புத்தி சொல்லாமலே வந்துடுது.
அதனாலே நான் போவல்லே. பார்க்கல்லே. அவங்களும்
இத்தனை நாளுலே எங்கோ போயிட்டாங்க.”