பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உறவு ❖ 33


“நீங்க ரொம்ப பாவமுங்க”

“பாவமா? அதெல்லாம் ஒண்ணுமில்லே.” ரோசம்
தொனித்தது. “யார் யாருக்கு என்னென்ன செய்யணுமோ,
என்னால் முடிஞ்ச வரைக்கும் செஞ்சாச்சு. அதுக்கென்ன,
வாங்கிக்கிறவங்களுக்கும், கொடுக்கறவங்களுக்கு திருப்
தின்னு காணப்போமா? எல்லாம் முடிஞ்சவரைக்கும்தான்.
அவங்களையெல்லாம் விட்டுட்டுப் போறோமேன்னு பெரிய
வருத்தமுமில்லே. பாவம், அப்பாவுக்கு உடம்பு சரியில்
லேன்னு போயிட்டிருப்பவளை என் சுயநலத்துலே நிறுத்தி
வெச்சேன். ஆச்சு, இன்னும் கொஞ்ச நேரம்தான்.”

“பரவாயில்லேங்க. எனக்கு அப்பிடியொண்ணும்
அங்கே பிடிப்பில்லேங்க. ஆள் வந்து சொல்லிச்சேன்னு
போறேன். நயினா அப்பிடி ஒண்ணும் ஒழுங்கா நடந்துக்
கலே. அம்மா செத்து கருமம் முடியல்லே. ஒரு சித்தாத்
தாளைக் கட்டி வீட்டுக்குக் கூட்டியாந்துட்டாரு. அப்பிடி
யென்ன அவசரமோ நடுமுத்தத் தாலிக்கு!”

“அப்படின்னா?”

“ஒரு தாலி கட்டி இழந்தவ, இல்லே தள்ளி வெச்சவ,
மறுதாலி கட்டினால், நடுமுத்தத் தாலின்னு சொல்லுவாங்க.
எங்க சாதிப் பழக்கம், நடுமுற்றத்துலே வெச்சுத் தாலி கட்டு
வாங்க. நடுமுத்தத் தாலிக்காரி சபையிலே வந்து குத்து
விளக்கு ஏத்த முடியாது. குங்குமம் வெச்சிப்பா. ஆனால்
மத்தவங்க கொடுக்க மாட்டாங்க. அதெல்லாம் சாதிக்
கட்டுப்பாடு. ஆனால் அப்படியும் அவளுக்கு ஒரு வாழ்வு
வேணுமேன்னு நடுமுத்தத் தாலி ஒரு அனுமதி.”

‘கஷ்டப் பேச்சு இப்போ ஏன்? உன்னைப் பத்திச்
சொல்லு.”

“உங்க புண்ணியத்துலே நல்லாயிருக்கேணுங்க. அவங்க