பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



உறவு ❖ 35


உடனே காற்றும் ஒய்ந்தது. சூரியன் மேகங்களைக்
கிழித்துக் கொண்டு புறப்பட்டான்.

சொல்லி வைத்தாற்போல் குரல்கள், கும்மாளம்,
கூக்குரல், சிரிப்பில், திருப்பத்தில் கிளம்பி, சீக்கிரமே
நெருங்க, திடுக்கிட்டுச் சட்டென்று நின்றன.

“அடடே என்ன இது? என்ன ஆச்சு? யாரு, உங்க
அப்பாரா?”

அவளுக்கு வாயடைத்துவிட்டது. அவர் முகத்தை
முந்தானையால் ஒற்றிக் கொண்டு, “ஆம்” என்று தலையை
ஆட்டினாள். எரிச்சொட்டுக்கள் இரண்டு விழியோரங்களில்
புறப்பட்டு, கன்னங்களில் அவைகளின் பாதையை தீய்த்துக்
கொண்டு மோவாயினின்று பூமியில் உதிர்ந்தன.