பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
3


அலைகள் ஒய்வதில்லை


அதோ கறுப்பிலிருந்து கறுப்பு பிரிஞ்சு-இருளுக்கும்
நிழல் உண்டோ-நிழல் மாதிரி இந்தப் பக்கம் வராப்போல
இல்லை? ஆமாம் வரது, ஆமாம் அவள்தான். அவளேதான்.
நடையில் தள்ளாட்டம்; ஆனால் அவள் நடைதான்.
அம்மாடி! வயிற்றுள் கோக்கோகோலா ‘ஜில்’

வந்து வாசற்படிக்கட்டில் அவர் அருகே அமர்ந்தாள்.
அவர் உடனே உள்ளே சென்று சொம்புடன் வந்து
அவளிடம் கொடுத்துவிட்டுத் தன்னிடத்தில் உட்கார்ந்து
கொண்டார். அவள் முகத்தைத் துடைத்துக் கொண்டு
குடித்த ஆவலில் கழுத்தில் வழிந்து மார்த்துணி நனைந்தது.

தெரு அடங்கிப் போச்சு. இங்கேயே இப்படித்தான்.
வீடுகள் ஒட்டியில்லை. தனித்தனி காம்பவுண்டுகள்.
அவர்களுடைய வீடு மட்டும் இந்த posh areaவில் ஒட்டாமல்,
சற்று அந்தக் காலத்து வீடு. ஓரிரண்டு காம்பவுண்டுகளுள்
கார்கள் நின்றன. மனுஷாளும் அவர்கள் வீடு மாதிரி.
எப்படியும் இவர்கள் அவர்களுடன் ‘டச்’ வைத்துக் கொள்ள
வில்லை. விரோதம் இல்லை. ஆனால் தேவையில்லை.
அப்படி அமைஞ்சு போச்சு.

“காப்பி குடிச்சாச்சா?” ஜாடையில்.

“இல்லை. நான் வீடு திரும்பவே எட்டாயிடுத்து. நீ?”