பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அலைகள் ஒய்வதில்லை ❖ 37


உதட்டைப் பிதுக்கினாள்.

“ஏதேனும் ஆகாரம் பண்ணினையா? ஹோட்டல்?-”

கையை விரித்தாள்.

வினாவில் அவர் புருவங்கள் உயர்ந்தன.

“பணம் எடுத்துண்டு போனால்தானே!”

“ஏன்?”

“தெரியல்லே.”

“என்ன அர்த்தம்?”

“தோணல்லே.”

கோபத்தில் அவருக்குக் கன்னம் குறுகுறுத்தது.

“அப்போ வழியில் மாரடைச்சால், கால் வலிச்சா, ஒரு
சோடாவுக்கு, பஸ் சார்ஜுக்கு வழியில்லே?”

“அப்படித்தான் தோணறது.”

“நீ பேசறது சரியாயிருக்கா?”

“இல்லை.”

“அப்போ ஏன் அப்படி?”

“என்னவோ தோணித்து, அப்படியே கிளம்பிட்டேன்.”

“சாப்பிடக்கூட இல்லே!”

மடியில் கைகளைக் கோர்த்துக் கொண்டாள். அதுதான்
பதில்போல்.

“எங்கே போனாய்?னு கேட்க மாட்டேன். ஆனால்
இப்படிப் போய், அப்படி என்ன பார்க்கப் போகணும்?”

“சரி.”

Oh, God, இவள் வம்புக்கு இழுக்கிறாள். ஆனால் நான்
இழுபடப் போவதில்லை.