பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ❖ லா. ச. ராமாமிர்தம்

தெருவில் ஒரு உருவம் அவர்கள் பக்கமாக வந்து சற்றுத்
தயங்கி, தாண்டிச் சென்றது. Night watchman. முதல் ரவுண்டு.

கூடத்தில் சுவர்க் கடியாரம் 1/2 மணி அடித்தது 10.30.!

தானாகவே:

“நான் லேட்டுனு தெரியும்.”

அடங்கினாள்.

காத்திருந்தார்.

சற்றுப் பொறுத்து, தானாகவே:

“ஏன் போனேன், ஏன் அப்படிப் போனேன் எனக்கே
இன்னும் நிச்சயம் ஆகல்லே. உங்களை ஆபீசுக்கு அனுப்பிச்
சுட்டு, என்னவோ கிளம்பிட்டேன்.”

“கதவைக் கூட தாளிடல்லே. நான் வரும் வரை யாரும்
உள்ளே புகாதது ஆச்சர்யந்தான்.”

“ஓ! அப்படியா? அது கூட நினைப்பில்லை என்னவோ
கால் இழுத்துண்டு போன வழி போயிட்டேன். எலியட்ஸ்
பீச்சு”

இங்கிருந்து எலியட்ஸ் பீச்சா? பேஷ்! இவளுக்கு
என்னவோ பிடிச்சிருக்கு.

“மணல் சூடு உள்ளங்கால் பொரிஞ்சது. இருந்தாலும்
நடந்து ஒரு ஒடத்து நிழலில் உட்கார்ந்தேன். அலைகளைப்
பார்த்துண்டிருந்தேன். நாம் சமுத்ரம் பார்த்து எத்தனை
நாளாச்சு!”

“அலைகளைப் பார்க்க சுவாரஸ்யமாத்தானிருக்கு.
ஒவ்வொரு தடவையும் தூரத்திலே ஒரு ஒரு உரு எடுத்துண்டு
சரிஞ்சு நுரை கக்கிண்டு கரை நெருங்கினதும் உடைஞ்சு
பரவி, முத்துக் கொப்புளிச்சுண்டு சிதறி வந்த வழியே