பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 ❖ லா. ச. ராமாமிர்தம்

“Thank you. ஆனால் அலைகள் ஒய்வதில்லை.”

சற்றுப் பொறுத்து, அவள்: “சேகர் அலை தாண்டியே
போய்விட்டான்.”

“ஓ, யோசனை அப்படியும் போக முடியுமோ?”

“ஏன் போகாது? ஒண்ணைத் தொட்டுத்தானே
ஒண்ணு!”

“அவனை சிங்கப்பூருக்கே இழந்துட்டோம்.”

“இதோ பார் கோமதி, நாம் பெற்றதனால் மட்டும் நம்
குழந்தைகள் நமக்குச் சொந்தமாகி விடாது. அதுஅது தன்
விதியைத் தான் நூத்துக் கொள்ளத்தான். பிறவி என்பதே
அதுதானே! பிரிவு சுலபமல்ல. ஒப்புக்கறேன். அவனுக்கும்
இருக்காதா? ஒண்ணு வேணும்னா, ஒண்ணை இழந்
தாகணும். வாழ்க்கையில் எதுவுமே இலவசமில்லை.
அவன் வெளிநாடு போனதால் நமக்கு என்ன குறைவா வெச்சிருக்
கான்? இன்னும் அமோகம். நம்ம வயசில் நமக்கு இது
தேவையில்லாத அமோகம். ஆனால் அமோகம்.”

“ஆமாம்.”

“எப்பவோ ஒரு தடவை சொன்னேனாம். ஒரு குடும்பத்
தில் ஒருவன் முன்னேறிவிட்டால் குடும்பமே உருப்பட்டு
விடும்னு அதைக் கெட்டியாய் பிடிச்சுண்டுட்டான். அதை
நடத்திக் காட்றான். முடியறது காட்டறான்.”

“அது சரிதான். ஒரு பக்கம் சொல்லிக்கப் பெருமையாத்
தானிருக்கு.”

“அவன் சிங்கப்பூர் போகாட்டா, நீ வாரம் இருமுறை
யேனும் உன் அலமாரியைத் திறந்து மூடி, திறந்து உள்ளே
இருப்பதைக் கீழே போட்டு, மறுபடியும் அடுக்கி அழகு
பார்த்துண்டிருக்க முடியுமா?”