பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அலைகள் ஒய்வதில்லை ❖ 41


“இந்த எடக்குப் பேச்சில் குறைவில்லை. உங்களை
என்ன பண்றேனாம்?”

“Correct. அது உன் சந்தோஷம். ஆனால் என் தாய்
என்னத்தைக் கண்டாள்? அவருக்கு மூச்சு லேசாகத்
திணறிற்று. “காண, கண்டு மகிழ அவளிடம் என்ன
இருந்தது? ஆனாலும் அவள் தன் வாழ்க்கையில் கசந்து
கொண்டு நான் பார்த்ததாக எனக்கு ஒரு நாளும் நினைப்
பில்லை. எப்பவும் சிரிச்ச முகம். சுறுசுறுப்பா எப்பவும்
ஏதேனும் காரியமா, தோட்டம் போட்டுண்டு பசு மாடைப்
பார்த்துண்டு வளைய வருவாள். காய்கறிக் கூடைக்காரி
போணிக்கு அவளிடம்தான் வருவாள். ‘நான் இப்படி ஆனப்
புறமும் என்னிடம் என்னடி போணி?’ என்று கேட்டால்,
‘அப்படியில்லேம்மா, நீ வாங்காட்டாப் போறே, சும்மா உன்
கையை, காய்கறி மேல்வை போதும். உன் அம்ஷம் உனக்குத்
தெரியாது, எங்களுக்குத் தெரியும்’ என்பார்கள்.”

“உங்கள் அம்மா கைராசி எனக்கும் தெரியும்.”

“ஒவ்வொருத்தர் அப்படி அம்சத்துடன் பிறக்கறா.
ஆனால் நானும் பார்த்தாச்சு, இந்த அசாதாரிணிகள்
பிறருக்குப் பயனாயிருப்பார்கள். ஆனால் தாங்கள் சுகப்
பட்டதில்லை. அவர்களுக்குப் பெரிய பலம் அவா மனசு
தான்.” பெருமூச்செறிந்தார். எங்கேயோ போயிண்டிருக்
கேன். சேகரைப் பத்திப் பேசிண்டிருந்தோம். நம்
பெண்ணைப்பத்தி நினைச்சையா?”

“நினைக்காமல் என்ன, பேசினால் தான் உண்டா?”

“ஒரு சமயம், சுமார் அஞ்சு வருஷத்துக்கு முன்னால்,
அவளுக்குக் கலியாணம் நேரும் முன்னால் காத்தி, நீ
இப்போ உக்காந்திருக்கையே இதே இடத்தில்-ஆமாம் அது
இப்போ நினைவுக்கு வருவானேன்? ஒரு ஆச்சரியம், கோமதி